மாணவர் கால்பந்து போட்டியில் பெரம்பூர் டான்பாஸ்கோ அணி சாம்பியன்
மாணவர் கால்பந்து போட்டியில் பெரம்பூர் டான்பாஸ்கோ அணி சாம்பியன்
UPDATED : பிப் 09, 2015 12:00 AM
ADDED : பிப் 09, 2015 10:43 AM
அ நிறம் | அளவு
செங்குன்றம்: பள்ளி அளவிலான மாணவர் கால்பந்து போட்டியில், பெரம்பூர் டான்பாஸ்கோ அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
செங்குன்றம் டான்பாஸ்கோ பள்ளி சார்பில், பள்ளி அளவிலான மாணவர் கால்பந்து போட்டி, இரண்டு நாட்கள் நடந்தது. அதில், 10 பள்ளிகள் பங்கேற்றன. அதன் இறுதி போட்டியில், பெரம்பூர் டான்பாஸ்கோ அணி 2-0 என்ற கோல் கணக்கில், எழும்பூர் டான்பாஸ்கோ அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. அதில், பெரம்பூர் டான்பாஸ்கோ அணி வீரர் கார்த்திக் இரண்டு கோல் அடித்து, அணியை வெற்றி பெற வைத்தார்.
