தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்லுாரி அளவிலான விளையாட்டு போட்டிகளில் பனிமலர் பொறியியல் கல்லுாரி சாம்பியன்

கல்லுாரி அளவிலான விளையாட்டு போட்டிகளில் பனிமலர் பொறியியல் கல்லுாரி சாம்பியன்

கல்லுாரி அளவிலான விளையாட்டு போட்டிகளில் பனிமலர் பொறியியல் கல்லுாரி சாம்பியன்


UPDATED : பிப் 09, 2015 12:00 AM

ADDED : பிப் 09, 2015 10:45 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 09, 2015 12:00 AM ADDED : பிப் 09, 2015 10:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாம்பரம்: பொறியியல் கல்லுாரி அளவிலான விளையாட்டு போட்டிகளில், பனிமலர் பொறியியல் கல்லுாரி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லுாரி சார்பில், 35வது, சாய்ராம் டைஸ் 2015 பொறியியல் கல்லுாரிகளுக்கான விளையாட்டு போட்டிகள், மேற்கு தாம்பரத்தில் நடந்து வருகிறது. வரும் 12ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டி களில், 204 பொறியியல் கல்லுாரிகளில் இருந்து, 40 ஆயிரம் மாணவ, மாணவியர் விளையாடி வருகின்றனர்.

ஆண்கள் பிரிவில் சதுரங்கம், வாலிபால், இறகு பந்து போட்டிகளில் நிறைவு பெற்றுள்ளன. வாலிபால் போட்டியில், பனிமலர் பொறியியல் கல்லுாரி அணி, 2-1 என்ற செட் கணக்கில், செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லுாரி அணியை தோற்கடித்து, சாம்பியன் பட்டம் வென்றது. மூன்றாம் இடத்தை முகம்மது சதக் ஏ.ஜே., பொறியியல் கல்லுாரி பிடித்தது.

இறகுபந்தில் ஸ்ரீ சிவசுப்பிரமணிய பொறியியல் அணி, 2-1 என்ற செட் கணக்கில், செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லுாரி அணியை வென்றது. கொங்கு பொறியியல் கல்லுாரி அணி, மூன்றாம் இடம் பெற்றது.

சதுரங்கத்தில் ஒன்பது சுற்று முடிவில், பி.எஸ்.என்.ஏ., பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லுாரி அணி முதலிடம் பெற்றது. இரண்டாம் இடத்தை, செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லுாரி அணி தக்க வைத்து கொண்டது. ஸ்ரீ சிவசுப்பிரமணிய பொறியியல் கல்லுாரி மூன்றாம் இடம் பெற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us