தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பாலியல் புகாரில் சிக்கிய தலைமை ஆசிரியரை மீண்டும் பணியில் அமர்த்த எதிர்ப்பு

பாலியல் புகாரில் சிக்கிய தலைமை ஆசிரியரை மீண்டும் பணியில் அமர்த்த எதிர்ப்பு

பாலியல் புகாரில் சிக்கிய தலைமை ஆசிரியரை மீண்டும் பணியில் அமர்த்த எதிர்ப்பு


UPDATED : பிப் 10, 2015 12:00 AM

ADDED : பிப் 10, 2015 10:51 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 10, 2015 12:00 AM ADDED : பிப் 10, 2015 10:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வால்பாறை: பாலியல் புகாரில் சிக்கிய தலைமை ஆசிரியரை, மீண்டும் பள்ளி பணியில் அமர்த்த ஆட்சேபித்து, போலீசாரிடம், பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம், வால்பாறை, சோலையார் எஸ்டேட், அரசு நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராக இருந்தவர், பள்ளி வளாகத்தில் ஆசிரியையுடன், நெருக்கமாக இருந்த வீடியோ வெளியானது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. புகாரில் சிக்கிய பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் இரண்டு ஆசிரியைகள், தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

ஓராண்டுக்கு பின், அவர்களுக்கு அதே பள்ளியில் பணி வழங்க கல்வி அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் பரவியது. இதையறிந்த பெற்றோர், பள்ளி முன் திரண்டனர். போலீசார் விசாரணை நடத்தினார். பாலியல் புகாரில் சிக்கிய ஆசிரியர்களை பணிபுரிய அனுமதிக்கக்கூடாது என, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சமாதானப்படுத்திய போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். இதையடுத்து, பெற்றோர் கலைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us