தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்கள் பங்கேற்கும் நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி ரேடியோவில் ஒலிபரப்பு

மாணவர்கள் பங்கேற்கும் நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி ரேடியோவில் ஒலிபரப்பு

மாணவர்கள் பங்கேற்கும் நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி ரேடியோவில் ஒலிபரப்பு


UPDATED : பிப் 11, 2015 12:00 AM

ADDED : பிப் 11, 2015 11:00 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 11, 2015 12:00 AM ADDED : பிப் 11, 2015 11:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: அரசு பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்கும் நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை, ரேடியோக்களில் ஒலிபரப்பு செய்ய, நுகர்வோர் பாதுகாப்புத் துறை முடிவு செய்துள்ளது.

கலெக்டர் தலைமையில் இயங்கும் நுகர்வோர் பாதுகாப்பு குழு, குறிப்பிட்ட இடைவெளியில் கூடி, நுகர்வோர் பாதுகாப்பு குறித்து ஆலோசித்து வருகிறது. நுகர்வோர் உரிமை மற்றும் கடமைகளை உணர்த்த, ரேடியோ வாயிலாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஒலிபரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிகளில் அரசு பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்க உள்ளனர்.

ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை இரவு 7.00 முதல் 7.30 மணி வரை, இந்நிகழ்ச்சி ஒலிபரப்பாகும். மாவட்டம்தோறும், மாணவ, மாணவியர் பங்கேற்கும் நாடகம், பட்டிமன்றம், நாட்டுப்புற பாட்டுக்கள் ஒலிபரப்பாகும். மாவட்டந்தோறும், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்க பதிவு செய்துள்ளனர். அந்தந்த மாவட்டங்களில் ரேடியோ நிலையங்களில், நிகழ்ச்சிக்கான ரிக்கார்டிங் நடந்து வருகிறது. திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் ஒத்திகை நடந்தது.

மாவட்ட நுகர்வோர் நலத்துறை அலுவலர்கள் கூறுகையில், "நுகர்வோர் பாதுகாப்பு குறித்து, ரேடியோவில் கலை நிகழ்ச்சி வாயிலாக, விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்கும் நிகழ்ச்சியை பதிவுசெய்து, தொடர்ந்து 52 வாரங்கள், வியாழன்தோறும் ஒலிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது" என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us