தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சென்னை சட்டக் கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்: உயர்நீதிமன்றம்

சென்னை சட்டக் கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்: உயர்நீதிமன்றம்

சென்னை சட்டக் கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்: உயர்நீதிமன்றம்


UPDATED : பிப் 11, 2015 12:00 AM

ADDED : பிப் 11, 2015 11:04 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 11, 2015 12:00 AM ADDED : பிப் 11, 2015 11:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சென்னை, பாரிமுனையில் உள்ள சட்டக் கல்லூரியை, வேறு இடத்துக்கு மாற்ற வேண்டியது அவசியமானதுதான் என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேறு இடம்

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்துடன், அம்பேத்கர் சட்டக் கல்லூரியும் உள்ளது. மெட்ரோ ரயில் பணிகளால், சட்டக் கல்லூரி கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது என்றும் கட்டடம் பாதுகாப்பாற்ற நிலையில் இருப்பதால், கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்றுவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.

கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்ற, அரசு நடவடிக்கை எடுத்தது. இதை எதிர்த்து, மாணவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டத்துக்கு, அரசியல் கட்சி தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சட்டக் கல்லூரியை, வேறு இடத்துக்கு மாற்றக் கூடாது என, அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், சித்திக் என்ற மாணவர், மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய, முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு: சட்டக் கல்லூரி கட்டடம், பாதுகாப்பற்றதாக உள்ளது என, பொதுப்பணித் துறை அறிவித்துள்ளது. கட்டடம் மோசமாக உள்ளது; உடனடியாக அதை பழுது பார்க்க வேண்டும் என, நிபுணர்கள் குழுவும் தெரிவித்துள்ளது.

ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் யார் பொறுப்பு என, அரசின் கவனத்துக்கு கொண்டுவந்தபோது, கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்ற, அரசு முயற்சி எடுத்தது. இதே கேள்வியை, மனுதாரரின் வழக்கறிஞரிடமும் எழுப்பினோம். கட்டடம், பாதுகாப்பானதாக இல்லை என நிபுணர்கள் கூறும்போது, இதுகுறித்து மாணவர்கள் முடிவெடுக்க முடியாது. நிபுணர்களின் முடிவை மீறி, தீர்ப்பும் அளிக்க முடியாது.

அக்கறை

பழுது பார்க்காமல், ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், உயிர் இழப்போ, காயங்களோ ஏற்படலாம். கட்டடத்தின் தன்மை பற்றி, நீதிமன்றம் அக்கறை கொள்கிறது. எனவே, கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டியது அவசியம் என்பதில், எந்த சந்தேகமும் இல்லை. கல்லூரியை மாற்றுவதால், கல்வி தரம் பாதிக்கப்படும் எனக் கூறுவதில், எந்த அடிப்படையும் இல்லை.

பாடத்திட்டத்தில் மாற்றமோ, ஆசிரியர் எண்ணிக்கை குறைவோ ஏற்படவில்லை. இடம்தான் மாற்றப்படுகிறது. அப்போதுதான், கட்டடத்தை பழுது பார்க்க முடியும். சட்டப்பூர்வமான வழிமுறைகளை பின்பற்றுவதற்கு பதில், சட்டத்தை தங்கள் கைககளில் மாணவர்கள் எடுத்துள்ளனர். கட்டடத்தின் நிலை பற்றி மாணவர்களுக்கு தெரியாது என கூறுவதை நம்ப முடியாது.

தற்போது, கட்டடத்தின் நிலையை பார்க்கும்போது, அதில் கல்லூரி இயங்குவதற்கான சூழ்நிலை இல்லை. மனுதாரர் கோரிய நிவாரணத்தை வழங்க இயலாது. மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us