தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/என்.எஸ்.எஸ்., முகாம்: ஆசிரியர் பயிற்சி நிறுவன மாணவர்கள் ஆர்வம்

என்.எஸ்.எஸ்., முகாம்: ஆசிரியர் பயிற்சி நிறுவன மாணவர்கள் ஆர்வம்

என்.எஸ்.எஸ்., முகாம்: ஆசிரியர் பயிற்சி நிறுவன மாணவர்கள் ஆர்வம்


UPDATED : பிப் 12, 2015 12:00 AM

ADDED : பிப் 12, 2015 01:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 12, 2015 12:00 AM ADDED : பிப் 12, 2015 01:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை: உடுமலை, திருமூர்த்திநகர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன நாட்டுநலப்பணி திட்டத்தின் சார்பில், தளி அரசு நடுநிலைப்பள்ளியில் என்.எஸ்.எஸ். முகாம் நடந்தது.

திருமூர்த்திநகர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன நாட்டுநலப்பணி திட்டத்தின் சார்பில், தளி பேரூராட்சி அரசு நடுநிலைப்பள்ளியில் என்.எஸ்.எஸ். முகாம் நடந்தது. ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் திருஞானசம்பந்தன் தலைமை வகித்தார். உடுமலை ஆர்.டி.ஓ. சாதனைக்குறள் முகாமினை துவக்கி வைத்தார். தளி பேரூராட்சி துணைத்தலைவர் சண்முகவடிவேல், செயல் அலுவலர் பூபாலன் முன்னிலை வகித்தனர்.

முகாமில், முதற்கட்டமாக மாணவர்கள், நடுநிலைப்பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்தினர். தொடர்ந்து, டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஏற்படும் வகையில் மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர். அடுத்து, டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தி, சுற்றுப்பகுதி மக்களுக்கு, கொசு உற்பத்தி அதிகரிப்பதை தவிர்ப்பதற்கான வழிமுறைகளை எடுத்துரைத்தனர். திருப்பூர் வன அலுவலர் தங்கராஜ் பன்னீர் செல்வம், மரக்கன்றுகள் நடுவதனால் ஏற்படும் பயன்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்தார்.

தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டனர். பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்க்கும் வகையில், திருமூர்த்திநகர் படகுத்துறை பகுதியில், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி, மாணவ மாணவியர் தூய்மைப்பணி செய்தனர். தவிர, சுகாதாரத்தை வலியுறுத்தும் வகையிலான கவிதை, கட்டுரை போன்ற இலக்கிய நிகழ்ச்சி மற்றும் நாடகம், நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. முகாமில், ஆசிரியர் பயிற்சி நிறுவன பேராசிரியர்கள் பங்கேற்றனர். முகாமிற்கான ஏற்பாடுகளை, நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் சரவணன் செய்திருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us