தமிழக பாரம்பரிய விளையாட்டுகளை பாதுகாக்கும் வகையிலான போட்டிகள்
தமிழக பாரம்பரிய விளையாட்டுகளை பாதுகாக்கும் வகையிலான போட்டிகள்
UPDATED : பிப் 14, 2015 12:00 AM
ADDED : பிப் 14, 2015 10:27 AM
அ நிறம் | அளவு
மதுரை: தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுகளை பாதுகாக்கும் வகையில் அதுதொடர்பான போட்டிகள் பிப்.21 காலை 8 மணிக்கு மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடக்கிறது.
ஆடவருக்கு சிலம்பம், உறியடி, தாயம், ஆடுபுலி ஆட்டம், கிளியான்தட்டு, கில்லி, பம்பரம் போட்டிகளும், மகளிருக்கு சிலம்பம், தாயம், பல்லாங்குழி, பாண்டி (நொண்டி), கண்ணாமூச்சி போட்டிகள் நடக்கின்றன. மதுரையை சுற்றியுள்ள பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களும் பங்கேற்கலாம். பிப். 21 காலை 8 மணிக்கு பெயர்களை நேரில் பதிவு செய்யலாம் என விளையாட்டு அலுவலர் முருகன் தெரிவித்துள்ளார்.
