பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் கிரிக்கெட் குவிஸ் போட்டி
பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் கிரிக்கெட் குவிஸ் போட்டி
UPDATED : பிப் 14, 2015 12:00 AM
ADDED : பிப் 14, 2015 10:08 AM
அ நிறம் | அளவு
மதுரை: உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு, தினமலர் நாளிதழ் நடத்தும் கிரிக்கெட் குவிஸ் போட்டி இன்று காலை(பிப்ரவரி 14) மதுரை, பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் துவங்குகிறது.
போன் மூலம் முன்பதிவு செய்தவர்கள் காலை 9 மணிக்கு வரவேண்டும். பதிவு எண்ணை கூறி விடைத்தாள் பெற்றுக்கொள்ள வேண்டும். 9.30 மணிக்கு இருக்கையில் அமர வேண்டும். முதல் பரிசு ரூ.10 ஆயிரம், கிரிக்கெட் கிட் 2ம், இரண்டாம் பரிசு ரூ.5 ஆயிரம், கிரிக்கெட் கிட், மூன்றாம் பரிசு ரூ.3 ஆயிரம், கிரிக்கெட் கிட் வழங்கப்படும். போட்டி பகல் 12.45 மணிக்கு முடியும். பார்வையாளர்களுக்கும் பரிசு உண்டு. அனுமதி இலவசம்.
