எந்த உத்தரவுமின்றி பலர் தற்காலிக அடிப்படையில் பணிபுரிவதாக சர்ச்சை
எந்த உத்தரவுமின்றி பலர் தற்காலிக அடிப்படையில் பணிபுரிவதாக சர்ச்சை
UPDATED : பிப் 14, 2015 12:00 AM
ADDED : பிப் 14, 2015 12:47 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை காமராஜ் பல்கலையில், பல்வேறு துறை அலுவலகங்களில், எந்த உத்தரவும் இன்றி பலர் தற்காலிக அடிப்படையில் பணிபுரிவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இப்பல்கலையில் தொகுப்பூதியம், தற்காலிக அடிப்படையில் 250 ஊழியர்கள் 10 ஆண்டுகளாக பணிபுரிகின்றனர். இவர்களை நிரந்தரப்படுத்த பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்படுகிறது. இரு மாதங்களாக பல்கலையின் பல்வேறு துறை அலுவலகங்களில் 50 கிளார்க் பணியிடங்கள் வரை தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட்டுள்ளதாக சர்ச்சையுள்ளது.
இந்நபர்களுக்காக தனி வருகை பதிவேடும் பின்பற்றப்படுகிறது. இந்த பணியிடங்களை நிரப்ப பல்கலை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. துணைவேந்தர் கல்யாணி, பல்கலை உத்தரவின்றி யாரும் பணிபுரிய முடியாது. இப்புகார் குறித்து விசாரிக்கப்படும், என்றார்.
