: சுற்றுலாத்துறை மாணவர்கள் 100% வேலை வாய்ப்பினைப் பெற்றுள்ளனர்: துணைவேந்தர்
: சுற்றுலாத்துறை மாணவர்கள் 100% வேலை வாய்ப்பினைப் பெற்றுள்ளனர்: துணைவேந்தர்
UPDATED : பிப் 14, 2015 12:00 AM
ADDED : பிப் 14, 2015 12:55 PM
புதுச்சேரி: சுற்றுலாத்துறை மாணவர்கள் 100 சதவீத வேலை வாய்ப்பினைப் பெற்றுள்ளனர் என, புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் பேசினார்.
புதுச்சேரி பல்கலைக்கழக சுற்றுலா மேலாண்மை துறை சார்பில் ஆகன்ஷா என்ற தலைப்பில் கல்வி நிறுவனங்கள் - தொழில் நிறுவனங்கள் இரண்டு நாள் சந்திப்பு கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கருத்தரங்கை பல்கலைக்கழக துணை வேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தி துவக்கி வைத்து பேசும்போது, "இந்தியாவில் சுற்றுலாத் துறை வேகமாக வளர்ந்து வருகிறது. பல தளங்களிலும் சுற்றுலா படிப்பு விரிவடைந்துள்ளது. எனவே பொதுவான சுற்றுலா படிப்பு என்றில்லாமல், கிராமப்புற சுற்றுலா, கலாசார சுற்றுலா என, குறிப்பிட்ட துறைகளில் தங்களுடைய தனித்திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சுற்றுலா துறையில் இறுதியாண்டு படிக்கும் சுற்றுலாத் துறை மாணவர்கள் அனைவரும் 100 சதவீத வேலைவாய்ப்பினைப் பெற்றுள்ளது, பாராட்டுக்குரியது" என்றார்.
தொடர்ந்து நடந்த சிறப்பு அமர்வுகளில் தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் பாடத்திட்டம், வேலை திறமை குறித்து விவாதிக்கப்பட்டது. இந்திய சுற்றுலா அமைச்சக மண்டல இயக்குனர் சோகிப் சமாத், புதுச்சேரி சுற்றுலாத் துறை செயலர் மிகிர் வர்தன், சென்னை இன்பினிடிவ் சாப்வேட் நிறுவன மேலாண் இயக்குனர் அனந்த நரசிம்மன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
