தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2 தேர்வுப் பணிகள் குறித்து தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் ஆய்வு

பிளஸ் 2 தேர்வுப் பணிகள் குறித்து தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் ஆய்வு

பிளஸ் 2 தேர்வுப் பணிகள் குறித்து தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் ஆய்வு


UPDATED : பிப் 14, 2015 12:00 AM

ADDED : பிப் 14, 2015 12:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 14, 2015 12:00 AM ADDED : பிப் 14, 2015 12:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை உட்பட ஐந்து மாவட்ட கல்வி அதிகாரிகளுடன், பிளஸ் 2 தேர்வுப் பணிகள் குறித்து தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் ஆய்வு செய்தார்.

மதுரை வந்த அவரை முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி வரவேற்றார். மாவட்ட கல்வி அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் அவர் பேசியதாவது: மார்ச் 5ல் துவங்கும் பிளஸ் 2 தேர்வில் எவ்வித குளறுபடியும் ஏற்படக்கூடாது. விடைத்தாள்களுடன் முதல் பக்கத்தை இணைக்கும் பணிகள் தற்போது முடிந்துள்ளன.

அச்சு படிவம் கொண்ட முதல் பக்கத்தில் ஏதாவது எழுத்து பிழை இருந்தால் அதை பேனாவால் தற்காலிகமாக திருத்தி ஹால் டிக்கெட் வழங்கும்போது, தெளிவாக எழுத வேண்டும். ஹால் டிக்கெட்டுகளில் இடம் பெறும் தகவல்கள்தான் மதிப்பெண் சான்றிதழிலும் இடம் பெறும். அதிகாரிகள் கவனத்துடனும், பதட்டமில்லாமலும் தேர்தல் பணி மேற்கொள்ள வேண்டும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us