தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குரூப் - 1 முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு...

குரூப் - 1 முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு...

குரூப் - 1 முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு...


UPDATED : பிப் 14, 2015 12:00 AM

ADDED : பிப் 14, 2015 01:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 14, 2015 12:00 AM ADDED : பிப் 14, 2015 01:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: குரூப் - 1 முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்கள், சான்றிதழ்களின் நகல்களை அனுப்பி வைக்கும்படி, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: குரூப் - 1 பிரிவில், 79 பதவிகளுக்கான முதல்நிலை தேர்வை, 2014 ஜூலை 20ம் தேதி, டி.என்.பி.எஸ்.சி., நடத்தியது. இதில் தேர்ச்சிபெற்ற, 4,389 பேருக்கும், தேர்வாணையத்திற்கு அனுப்ப வேண்டிய சான்றிதழ் விவரம், தேர்வுக்கட்டணம் குறித்த குறிப்பாணை, விரைவு தபால் மூலம், அனுப்பப்பட்டுள்ளது.

அந்த குறிப்பாணை, தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. தேர்ச்சி பெற்றவர்கள், தங்கள் தேர்வு பதிவு எண்ணை பதிவுசெய்து, குறிப்பாணை மற்றும் அதன் இணைப்புகளை பதிவிறக்கம் செய்யலாம்.

குறிப்பாணையில் கேட்கப்பட்டுள்ள சான்று இடப்பட்ட சான்றிதழ்களின் நகலை, பிப்., 17 அல்லது அதற்குமுன், தேர்வாணைய அலுவலகத்திற்கு வந்து சேரும்படி அனுப்ப வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us