தினமலர் நடத்திய ஓவியப்போட்டியில் மலைபோல் குவிந்த மாணவர்களின் ஓவியங்கள்
தினமலர் நடத்திய ஓவியப்போட்டியில் மலைபோல் குவிந்த மாணவர்களின் ஓவியங்கள்
UPDATED : பிப் 15, 2015 12:00 AM
ADDED : பிப் 15, 2015 12:21 PM
பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, தினமலர் சார்பில் நடத்தப்பட்ட லிட்டில் மாஸ்டர் ஓவியப் போட்டியில், மலைபோல குவிந்த ஓவியங்களில், மணியான ஓவியங்கள், பரிசுக்குத் தேர்வாகியுள்ளன.
இந்தியா-அமெரிக்கா உறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, இந்த ஆண்டில் நடந்த குடியரசு தினவிழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவரை வரவேற்கும் விதமாகவும், பள்ளி மாணவர்களின் ஓவியத்திறனை ஊக்குவிக்கும் முயற்சியாகவும் தினமலர் நாளிதழ் சார்பில், லிட்டில் மாஸ்டர் என்ற பெயரில் ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.
ஆறாம் வகுப்பிலிருந்து, ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நடத்தப்பட்ட இந்த போட்டியில், மாநிலம் முழுவதிலிருந்தும், எட்டாயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவியர் பங்கேற்றிருந்தனர். ஒபாமாவை விதவிதமாக வரைந்து அசத்தியிருந்ததுடன், பிரதமர் மோடியையும் இணைத்து ஓவியம் தீட்டி, இரு தேச உறவுக்கு ஓவியங்களால் உயிரூட்டியிருந்தனர்.
மலைபோல குவிந்து, மலைக்க வைத்த ஓவியங்களில் சிறந்த ஓவியங்களைத் தேர்வு செய்வது, மிகப்பெரும் சவாலாக இருந்தது. கோவை ரவிராஜ் லலித் கலாஷேத்ரா செயல் இயக்குனர் ரவிராஜ், ஓவியத்துறைத்தலைவர் முருகேஷ், ஓவிய ஆசிரியர்கள் இந்துமதி, வித்யா, ஸ்நேகா ஜெயின், மதுர பாஷினி மற்றும் தினமலர் ஆசிரியர் குழுவினர் தேடலில், தேர்வாயின சிறந்த ஓவியங்கள்.
பரிசுக்குரிய ஓவியங்களை வரைந்து அசத்தியவர்கள்
சிறப்பு பரிசு:எம். கவுசல்யா (ஏழாம் வகுப்பு டி) அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, யா.ஒத்தக்கடை, மதுரை - 625 107
முதல் பரிசு: வி. அஞ்சனா (ஆறாம் வகுப்பு டி) அவிலா கான்வென்ட், கோவை - 25
இரண்டாம் பரிசு: கே. அபிஷேக் விக்ரம் ( எட்டாம் வகுப்பு ஏ) வாசவி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பேரூர் மெயின் ரோடு, கோவை - 39
மூன்றாம் பரிசு: ஆர். கணேஷ் (ஏழாம் வகுப்பு சி) ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பழையதாம்பரம், சென்னை - 45
ஆறுதல் பரிசுகள்
1. பி. பாலாஜி (ஒன்பதாம் வகுப்பு சி), டவுட்டன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, வேப்பேரி, சென்னை -7
2. எஸ். நிவேதா (ஒன்பதாம் வகுப்பு ஏ ), அரசினர் மேல்நிலைப் பள்ளி, அலமாதி, சென்னை - 52
3. எஸ்.மோனிகா (எட்டாம் வகுப்பு எப்), எஸ்.எஸ்.கே.வி. பெண்கள் மேல்நிலைப் பள்ளி,காஞ்சிபுரம்.
4. ஆர். விக்னேஷ் (ஏழாம் வகுப்பு ), வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, முகப்பேர் கிழக்கு, சென்னை.
5. கே. ஆர். ரோஷ்ணி (ஏழாம் வகுப்பு எல்), எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி மற்றும் ஜூனியர் கல்லுாரி, அண்ணாநகர் மேற்கு, சென்னை - 101.
6. எஸ். கிஷோர் குமார் (ஏழாம் வகுப்பு ), ஸ்ரீ சம்பூர்ணா வித்யாலயம், வில்லியனுார், புதுச்சேரி.
7. எஸ். சசி ( ஒன்பதாம் வகுப்பு ), சாந்தா கிளாரா கான்வென்ட் பள்ளி, கே. மணவேலி, புதுச்சேரி.
8. எஸ்.வேந்தன் (ஆறாம் வகுப்பு), பிரைட்ஸ் மேல்நிலைப் பள்ளி, லாஸ்பேட்டை, புதுச்சேரி.
9. வி.கே. ஆர். பிரியங்கா (எட்டாம் வகுப்பு), நித்யானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, விழுப்புரம்.
10. துா.பரஞ்ஜோதி, அரசு உயர்நிலைப்பள்ளி, கண்டியநல்லுார், கடலுார்.
11. எஸ். ஸ்ரீ தஷ்னா ( ஒன்பதாம் வகுப்பு ), கே. செண்பக விநாயகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சிவகாசி.
12. கே. அஜய் கண்ணன் (ஒன்பதாம் வகுப்பு), முத்தையா அழகப்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கோட்டை யூர், சிவகங்கை மாவட்டம்.
13. பி. நாகராஜன் ( ஒன்பதாம் வகுப்பு சி), தியாகராஜன் மாடல் மேல்நிலைப் பள்ளி, மதுரை.
14. பி. வீரமணிகண்டன் (எட்டாம் வகுப்பு பி), சேதுபதி மேல்நிலைப் பள்ளி, மதுரை.
15. ஜி.மதன்சிங் (ஒன்பதாம் வகுப்பு டி), அலங்கார மாதா உயர்நிலைப் பள்ளி, ராமநாதபுரம்.
16. ரூபதர்ஷினி (ஆறாம் வகுப்பு), அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கம்பம்.
17. எஸ். லோகேஷ் கண்ணா (எட்டாம் வகுப்பு பி), ஸ்ரீவிக்னேஷ்வரா மேல்நிலைப் பள்ளி, பொங்கு பாளையம், பெருமாநல்லுார், திருப்பூர்.
18. எஸ். ஜெயவிஷ்ணு (ஏழாம் வகுப்பு ஏ), சச்சிதானந்தா ஜோதி நிகேதன், கல்லார், மேட்டுப்பாளையம்.
19. ஜி. கோகுல் அபிநவ் (ஒன்பதாம் வகுப்பு ஏ) பி.எஸ்.பி.பி., மில்லினியம் பள்ளி, கோவை -108
20. பவிகா துகார் (எட்டாம் வகுப்பு ஏ), பாரதிய வித்யா பவன் , ஆர்.எஸ்.புரம், கோவை.
21. எஸ். ராகுல் ( ஒன்பதாம் வகுப்பு ஏ), ஏ.வி.பி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தெற்குபாளையம், கோவை - 20.
சிறப்புப்பரிசாக, 15 ஆயிரம் ரூபாய், முதல் பரிசாக 10 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக 7,500 ரூபாய், மூன்றாம் பரிசாக 5 ஆயிரம் ரூபாய், ஆறுதல் பரிசாக, 21 பேருக்கு தலா, 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்; போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவியர் அனைவருக்கும் சான்றிதழ் உண்டு.
பரிசுகளை வெல்ல முடியாத மாணவர்கள், வருத்தப்பட வேண்டியதில்லை. உங்களின் ஓவியத்திறமையை வெளிப்படுத்த, இன்னும் பல களங்கள் காத்திருக்கின்றன. உங்களுக்காகவே அடுத்த போட்டி அறிவிக்கப்படவுள்ளது விரைவில்.
