தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மோட்டார் வாகன ஆய்வாளர் பதவிக்கு மார்ச் 5ல் நேர்காணல் தேர்வு: டி.என்.பி.எஸ்.சி.

மோட்டார் வாகன ஆய்வாளர் பதவிக்கு மார்ச் 5ல் நேர்காணல் தேர்வு: டி.என்.பி.எஸ்.சி.

மோட்டார் வாகன ஆய்வாளர் பதவிக்கு மார்ச் 5ல் நேர்காணல் தேர்வு: டி.என்.பி.எஸ்.சி.


UPDATED : பிப் 17, 2015 12:00 AM

ADDED : பிப் 17, 2015 12:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 17, 2015 12:00 AM ADDED : பிப் 17, 2015 12:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: மோட்டார் வாகன ஆய்வாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வில் தகுதி பெற்றோருக்கு, மார்ச் 5ம் தேதி நேர்காணல் தேர்வு நடக்கும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஷோபனா வெளியிட்ட அறிவிப்பு வருமாறு: தமிழ்நாடு போக்குவரத்து சார்நிலைப் பணியில் மோட்டார் வாகன ஆய்வாளர், 2ம் நிலை பதவிக்கு 17 காலிப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, 2012 ஆகஸ்ட் 26ம் தேதி நடத்தப்பட்டது.

இதில் பங்கேற்ற 1,686 விண்ணப்பதாரர்களில், 42 பேர் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நேர்காணல் தேர்வு, தேர்வாணைய அலுவலகத்தில் மார்ச் 5ம் தேதி நடத்தப்படும்.

தேர்வு செய்யப்பட்டோரின் பதிவெண்கள், http:/www.tnpsc.gov.in/results.html என்ற தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us