வேதியியல் துறை வளர்ச்சிகள் என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கு
வேதியியல் துறை வளர்ச்சிகள் என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கு
UPDATED : பிப் 18, 2015 12:00 AM
ADDED : பிப் 18, 2015 10:41 AM
அ நிறம் | அளவு
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., கல்லூரியில் வேதியியல் துறை சார்பாக பல்கலை மானிய உதவியுடன், சமீபத்தில், வேதியியல் துறை வளர்ச்சிகள் என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கு நடந்தது.
ஹைதராபாத் பல்கலை பேராசிரியர் பெரியசாமி, மதுரை காமராஜர் பல்கலை வேதியியல் துறை டாக்டர் பிச்சுமணி, பேராசிரியர் முத்து சுப்பிரமணி, அழகப்பா பல்கலை வேதியியல் துறை தலைவர் மணிசங்கர், சென்னை ஐ.ஐ.டி., வேதியியல் உதவி பேராசிரியர் அன்பரசன், மும்பை பாபா அணுசக்தி ஆராய்ச்சி மைய விஞ்ஞானி டாக்டர் அமர்நாத் பேசினர்.
பல்வேறு கல்லூரிகளின் பேராசிரியர்கள் மாணவர்கள் தங்கள் ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.
