தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உணவு தாமதமாக வந்ததால் மாணவனை பட்டினி போட்ட தனியார் பள்ளி

உணவு தாமதமாக வந்ததால் மாணவனை பட்டினி போட்ட தனியார் பள்ளி

உணவு தாமதமாக வந்ததால் மாணவனை பட்டினி போட்ட தனியார் பள்ளி


UPDATED : பிப் 18, 2015 12:00 AM

ADDED : பிப் 18, 2015 11:55 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 18, 2015 12:00 AM ADDED : பிப் 18, 2015 11:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தனியார் பள்ளி ஒன்றில், மாணவருக்குத் தாமதமாக உணவு கொண்டு வந்ததால், அதை சாப்பிட மாணவருக்கு பள்ளி நிர்வாகம் தடை விதித்ததாக, கல்வித்துறைக்கு புகார் வந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

தனியார் பள்ளிகளில் காலையில், மாணவ, மாணவியர் பள்ளிக்குச் செல்லும்போதே, ஸ்நாக்ஸ் நேரத்துக்கான நொறுக்குத் தீனியும், மதிய உணவும் கொண்டு செல்வர். மதிய உணவு காலையில் தயார் செய்யாத பெற்றோர், காலை 11:00 மணிக்குள் பள்ளியின் காவலர் இருக்கும் இடத்தில், உணவை வைத்து விட்டு சென்று விடுவர். பின், மாணவ, மாணவியர் தங்கள், ஸ்நாக்ஸ் இடைவெளியில், உணவை எடுத்துச் செல்வது வழக்கம்.

இந்நிலையில், சென்னைப் பள்ளிக் கல்வித்துறையின் ஆங்கிலோ இந்தியன் பள்ளி பிரிவு அதிகாரிகளுக்கு, தொலைபேசியில் பெற்றோர் ஒருவரிடம் இருந்து புகார் வந்தது. அதில் அவர், என் மகனுக்கு, ஸ்நாக்ஸ் நேரத்துக்குப் பின், தாமதமாக மதிய உணவு கொண்டு சென்றதால், அவனை மதியம் சாப்பிட விடாமல் பள்ளி ஆசிரியர்கள் சிலர் தடுத்து விட்டனர் என்று தெரிவித்தார்.

இதுகுறித்து, சம்பந்தப்பட்ட பள்ளியின் தாளாளரை தொடர்பு கொண்டு, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும், இதுபோல் இனி நடந்து கொள்ளக்கூடாது; இதுபோன்ற புகார்கள் வந்தால், பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us