தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பணத்துக்கு ‘புராஜக்ட்’; கல்லூரி மாணவர்களின் அறிவுத்திறன்‘?’

பணத்துக்கு ‘புராஜக்ட்’; கல்லூரி மாணவர்களின் அறிவுத்திறன்‘?’

பணத்துக்கு ‘புராஜக்ட்’; கல்லூரி மாணவர்களின் அறிவுத்திறன்‘?’


UPDATED : பிப் 19, 2015 12:00 AM

ADDED : பிப் 20, 2015 10:15 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 19, 2015 12:00 AM ADDED : பிப் 20, 2015 10:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாலிடெக்னிக், இன்ஜினியரிங், கலை,அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் இறுதியாண்டு மாணவர்களுக்கு ‘புராஜக்ட்’ உள்ளது. குறிப்பிட்ட தலைப்பு வழங்கப்படும். பி.எஸ்சி. (ஐ.டி.,), பி.எஸ்சி. (கம்ப்யூட்டர் சயின்ஸ்), பி.பி.ஏ., பி.இ. (ஐ.டி.,) மாணவர்கள் சாப்ட்வேர் முறையில் இந்த புராஜக்ட்டை சமர்ப்பிக்க வேண்டும்.

அவர்கள் சமர்ப்பித்த புராஜக்ட் மீது,பேராசிரியர்கள் நேர்காணல் நடத்துவர். சரியாக பதில் கூறுபவர்களுக்கே மதிப்பெண் வழங்கப்படும். சாப்ட்வேர் சம்பந்தமாக புராஜக்ட் வழங்க பல்வேறு தனியார் கம்ப்யூட்டர் மையங்கள் களத்தில் குதிக்கின்றன. இவர்கள் மாணவர்களிடம், குறிப்பிட்ட சாப்ட்வேரை பயின்றால், அதை கற்று கொள்வதுடன், கல்லூரிக்கான இறுதியாண்டு சாப்ட்வேரையும் செய்து தருவோம் என கூறுகின்றனர்.

இன்னொரு வகையில் சிறந்த இன்ஜினியர்கள் மூலம், இந்த புராஜக்ட் செய்து ரெடிமேடாக கொடுக்கப்படுகிறது. இதற்கு குறைந்தது ரூ.5 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. ஒரு சில நேரங்களில் இந்த புராஜக்டை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் ஏற்றுக் கொள்வதில்லை. இதனால் மாணவர்கள் பணம் விரயமாவதுடன் புராஜக்ட் குறித்த எவ்வித புரிதலும் இல்லாமல், அதை உடனே செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

காரைக்குடியில் கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் புராஜக்ட் செய்வதற்காக இன்ஜி., கல்லூரி மாணவிகள் ரூ.12 ஆயிரம் வழங்கியுள்ளனர். அந்த புராஜக்ட் வேறு தலைப்பில் உள்ளதாக கூறி பணத்தை திரும்ப வழங்க வேண்டும் என கூறி மாணவிகள் அந்த நிறுவனத்தை முற்றுகையிட்டனர். நிறுவனம் சார்பிலோ, நாங்கள் அவர்கள் கூறிய தலைப்பில் தான் புராஜக்ட்டை வடிவமைத்தோம். தற்போது அவர்கள் இதைவிட குறைவான விலையில் வேறு இடத்தில் ஏற்பாடு செய்து விட்டனர். அதனால், பணத்தை கேட்கின்றனர், என்றார்.

கல்லூரி பேராசிரியர் ஒருவர் கூறும்போது: ஒன்றாம் வகுப்பு படிக்கும்போதே புராஜக்ட் செய்ய சொல்கின்றனர். ஆனால், மாணவர்கள் செய்வதில்லை. கடையில் ரெடிமேடாக வாங்கி கொடுக்கின்றனர். பல அறிவியல் கண்காட்சியில், இந்த வகை ரெடிமேடு புராஜக்ட்களுக்கு முதல் பரிசும் கிடைக்கிறது. இந்த பழக்கம் பிஎச்.டி., வரை தொடர்கிறது. இதனால் முழுமையான அறிவாற்றல் அந்த மாணவருக்கு கிடைக்காது. கல்லூரிகளும் மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும். அதுவரை இந்த குழப்பம் இருக்கத்தான் செய்யும், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us