தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2 வினாத்தாள்; 24 மணிநேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு

பிளஸ் 2 வினாத்தாள்; 24 மணிநேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு

பிளஸ் 2 வினாத்தாள்; 24 மணிநேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு


UPDATED : பிப் 19, 2015 12:00 AM

ADDED : பிப் 19, 2015 12:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 19, 2015 12:00 AM ADDED : பிப் 19, 2015 12:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மார்ச், 5ம் தேதி பிளஸ் 2 பொதுத் தேர்வு துவங்குகிறது. பிளஸ் 2 வினாத்தாள்கள் சென்னையிலிருந்து, நேற்று பிற்பகலில் மாவட்டங்களுக்கு தனித்தனி வாகனங்களில் போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டன.

பல கட்டுப்பாடுகள்:

வாகனங்களை வழியில், தேவையின்றி நிறுத்தக்கூடாது; மொபைல் போனில் யாரையும் தொடர்பு கொண்டு பேசக்கூடாது என, வினாத்தாள் கொண்டு செல்வோருக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வினாத்தாள் கட்டுகள் மூடி முத்திரையிட்ட உறைகளில், மூன்றடுக்கு பாதுகாப்பு பண்டல்களுடன், மாவட்ட ரகசிய காப்பு அறைகளில் இன்று வைக்கப்படுகிறது. மாநிலம் முழுவதும், 130 இடங்களில் வினாத்தாள் ரகசிய காப்பு அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இன்று முதல், மார்ச், 5ம் தேதி அதிகாலை வரையில் வினாத் தாள்கள் பாதுகாக்கப்படுகிறது.

கட்டுகள் பிரிக்கப்பட்டு...:

மார்ச் 5ம் தேதி காலையில் தேர்வுத்துறை அதிகாரிகள் முன்னி லை யில், வினாத்தாள் கட்டுகள் பிரிக்கப்பட்டு, தேர்வு மையங்களுக்கு அனுப்பப்படும். கடந்த காலங்களில், வினாத்தாள்கள் சில இடங்களில் ’லீக்’ ஆனதாக புகார்கள் எழுந்துள்ளன. எனவே, இம்முறை போலீசாரின் முழுக் கட்டுப்பாட்டில் வினாத்தாள் கட்டுகள், ரகசிய காப்பு அறையில் பாதுகாக்கப்பட உள்ளது.

இயக்குனர் கடிதம்:

இதுகுறித்து, மாவட்ட எஸ்.பி.,க்களுக்கு, தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் கடிதம் அனுப்பியுள்ளார். வினாத்தாள் கட்டுக்களை, ரகசிய காப்பு அறைகளில் போலீசார் பாதுகாக்க வேண்டும். பாதுகாப்பு அறையை உரிய உத்தரவு இன்றியோ, தேர்வுத்துறை அனுமதித்த அதிகாரிகள் இல்லாமலோ திறக்கக்கூடாது. மேலும், 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு, ரகசிய கேமராக்கள் பாதுகாப்பு அறை முன் நிறுவப்பட வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

அதிகாரிகள் ஆய்வு:

வினாத்தாள் பாதுகாப்பு பணிகளை பார்வையிட தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் தலைமையில், பள்ளி கல்வித்துறையின் இயக்குனர்கள் கண்ணப்பன், அறிவொளி, பூஜா குல்கர்னி. இளங்கோவன், பிச்சை, ராமேஸ்வர முருகன் உள்ளிட்ட அதிகாரிகள், தமிழகம் முழுவதும் 3 நாட்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பள்ளிக்கல்வி செயலர் சபீதாவும், ’வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் ஆய்வு செய்து வருகிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us