தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உண்ணாவிரதம் இருந்த 14 வனக்கல்லூரி மாணவர்கள் மயக்கம்

உண்ணாவிரதம் இருந்த 14 வனக்கல்லூரி மாணவர்கள் மயக்கம்

உண்ணாவிரதம் இருந்த 14 வனக்கல்லூரி மாணவர்கள் மயக்கம்


UPDATED : பிப் 19, 2015 12:00 AM

ADDED : பிப் 19, 2015 12:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 19, 2015 12:00 AM ADDED : பிப் 19, 2015 12:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்: உண்ணாவிரதத்தின் போது மயக்கமடைந்த வனக் கல்லூரி மாணவர்கள், 14 பேர், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், 213 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். வனச்சரகர் பணிக்கு, 100 சதவீதம் வனவியல் பட்டதாரிகளை நியமிக்க வேண்டும்; வனவர் பணியில், வனவியல் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனக் கோரி, போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் காலை, காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவக்கினர்.

பேச்சில் உடன்பாடு ஏற்படாத நிலையில், இரண்டாம் நாளாக நேற்றும் உண்ணாவிரதம் தொடர்ந்தது. நேற்று மாலை வரை, 14 மாணவ, மாணவியர் மயக்கம் அடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்த மாணவர்களின் பெற்றோர், கண்ணீர் மல்க, கல்லூரி முன் திரண்டனர். அவர்களை கல்லூரி நிர்வாகம் உள்ளே விட அனுமதிக்காத நிலையில், 50 போலீசார், கல்லூரி முன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us