தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வனவர், கள உதவியாளர் பணிக்கு தகுதியானவர்கள் யார்?

வனவர், கள உதவியாளர் பணிக்கு தகுதியானவர்கள் யார்?

வனவர், கள உதவியாளர் பணிக்கு தகுதியானவர்கள் யார்?


UPDATED : பிப் 19, 2015 12:00 AM

ADDED : பிப் 19, 2015 12:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 19, 2015 12:00 AM ADDED : பிப் 19, 2015 12:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தமிழக வனத்துறையில் வனவர், கள உதவியாளர் பணிக்கான தேர்வில், அறிவியல் மற்றும் பொறியியல் பட்டதாரிகளே தகுதியானவர்கள் என, வனச்சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்து உள்ளது.

இதுகுறித்த செய்திக் குறிப்பு:

தமிழக அரசின் வனத்துறை மற்றும் வனக் கழகங்களில் காலியாக உள்ள, 181 வனவர், கள உதவியாளர் பதவிகளுக்கு, தகுதியானவர்களை தேர்வு செய்ய, சென்னை, திருச்சி, சேலம், கோவை, மதுரை மற்றும் நெல்லையில், பிப்., 22ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படுகிறது.

தேர்வு நாளன்று, காலை, 10:00 - 1:00 மணி வரை, பொது அறிவு தாள் - 1ம், பிற்பகல், 2:30 - 5:30 மணி வரை, பொது அறிவியல் தாள் - 2ம் நடக்கிறது.

இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில், 6,000 பேரது, ’ஹால் டிக்கெட்’, www.forests.tn.nic.in அல்லது http://forest.examonline.co.in என்ற இணையதளங்களில் உள்ளது. இணையதளங்களில் இருந்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அறிவியல் சார்ந்த பட்டப்படிப்புகள் மற்றும் பொறியியல் படித்தவர்கள் மட்டுமே, வனவர், கள உதவியாளர்கள் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us