தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/100 ஆண்டுக்கு முன் தொடங்கிய அரசு பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்யப்படுமா?

100 ஆண்டுக்கு முன் தொடங்கிய அரசு பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்யப்படுமா?

100 ஆண்டுக்கு முன் தொடங்கிய அரசு பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்யப்படுமா?


UPDATED : பிப் 21, 2015 12:00 AM

ADDED : பிப் 21, 2015 12:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 21, 2015 12:00 AM ADDED : பிப் 21, 2015 12:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அன்னுார்: அன்னுாரில் 100 ஆண்டுக்கு முன் தொடங்கிய அரசு துவக்கப் பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்யப்படுமா என அங்கு படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். அன்னுார் ஓதிமலை ரோட்டில் அரசு துவக்கப்பள்ளி உள்ளது.

இப்பள்ளியில் 126 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். 1916ல் துவங்கப்பட்ட இந்த பள்ளிக்கு, 1921ல் நிரந்தர சான்று வழங்கப்பட்டது. பெருமைமிகு இப்பள்ளியில் அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளது.

இதுகுறித்து பெற்றோர் கூறியதாவது: பள்ளியில் வகுப்பறைகள் கூடுதலாக வேண்டும். தளம் அமைக்க வேண்டும். நடுநிலைப் பள்ளிகளுக்கு மட்டுமே அரசு கம்ப்யூட்டர் வழங்குகிறது. இங்கு மாணவர்கள் வசதிக்காக கம்ப்யூட்டர் தேவைப்படுகிறது. பழைய கட்டடங்களில் பராமரிப்பு பணி செய்ய வேண்டும். 100 ஆண்டு கண்ட இப்பள்ளிக்கு உதவ முன்னாள் மாணவர்களும், மற்றவர்களும் முன்வர வேண்டும். இவ்வாறு பெற்றோர் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us