வேடிக்கையாக நடந்த பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள்
வேடிக்கையாக நடந்த பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள்
UPDATED : பிப் 22, 2015 12:00 AM
ADDED : பிப் 22, 2015 11:26 AM
மதுரை: விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மதுரை ரேஸ்கோர்சில் நடந்த பாரம்பரிய விளையாட்டுகள் கூத்தும், கொடுமையுமாக நடந்தன.
மதுரை உட்பட பல மாவட்டங்களில் பெண்களுக்கு கிளித்தட்டு, பல்லாங்குழி, தாயம், கண்ணாமூச்சி, லங்கடி (நொண்டியடித்தல்) விளையாட்டுகளும், ஆண்களுக்கு கிட்டிப்புல், பம்பரம், உறியடி, ஆடுபுலி ஆட்டம் போன்றவை ஆணையத்தால் நடத்தப்பட்டன.
மதுரையில் உறியடியை அமைச்சர் சுந்தர்ராஜன், அமைச்சர் செல்லூர் ராஜூவின் கண்களை கட்டி துவக்கினார். அமைச்சர் கம்பை பிடிக்க, அவரது சகாக்கள் கையை பிடித்து பானையை உடைக்க வழிகாட்டினர். கோபாலகிருஷ்ணன் எம்.பி., கண்களை கட்டிக் கொண்டு, அடுத்த மைதானம் சென்று பானையை உடைக்காமல் திரும்பினார். கிளித்தட்டு விளையாட இடம் இல்லை. போட்டிக்காக மைதானத்தில் ஆட்டம் சொல்லி தரப்பட்டு நடந்தது.
போட்டி துவங்கியதும் அமைச்சர்கள் அங்கு சென்றனர். போட்டோ எடுக்க வசதியாக அமைச்சர்கள் நிற்கும் பகுதியில் மாணவியர் விளையாட வைக்கப்பட்டனர். செல்லூர் ராஜூ கிட்டிப்புல் அடிக்க, பின்னாலிருந்த மாணவர் கேட்ச் செய்தார். அமைச்சர் சுந்தர்ராஜன் பம்பரம் விளையாடினார். தாயம் விளையாட கட்டம் போட்டு தருவதற்கு பதில் பரமபத அட்டையை பெண்களுக்கு வழங்கினர். பல்லாங்குழி, தாய விளையாட்டிற்கு 20 பேர் வரை பங்கேற்றனர்.
இப்படி பராம்பரிய விளையாட்டுக்கள் கேலிக்கூத்தாக நடந்தன. கலெக்டர் சுப்ரமணியன், மேயர் ராஜன் செல்லப்பா, எம்.எல்.ஏ.,க்கள் போஸ், கதிரவன் பங்கேற்றனர். திட்டமிடல் இன்றி திடீரென பாரம்பரிய விளையாட்டுகளை நடத்துவதற்கு பதில் பள்ளி, கல்லூரிகளில் இந்த விளையாட்டுகளை கற்றுத் தர வேண்டும்.
