UPDATED : பிப் 22, 2015 12:00 AM
ADDED : பிப் 22, 2015 11:28 AM
தேனி: ஐ.எப்.எஸ்., தேர்வில் தேனி இன்ஜினியர் தமிழக அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இந்திய வன அலுவலர் (ஐ.எப்.எஸ்.) பணிக்காக மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வு முடிவு பிப்.,18 ல் வெளியானது. இதில் தேனி மாவட்டத்தை சேர்ந்த இன்ஜினியர் ருத்ரன் தமிழக அளவில் இரண்டாவது இடமும், இந்திய அளவில் 19 வது இடமும் பிடித்துள்ளார்.
தேனி மாவட்டம் போடியை சேர்ந்தவர் ருத்ரன், 23. இவரது தந்தை பெரியசாமி. இவர் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலராக உள்ளார். ருத்ரன் கூறுகையில், "தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 2 படித்தேன். சென்னை அண்ணா பொறியியல் கல்லூரியில் பி.இ., மெக்கானிக்கல் முடித்தேன். தற்போது சென்னையில் உள்ள பன்னாட்டு கம்பெனியில் பணிபுரிந்து வருகிறேன். வனத்துறையில் பணிபுரிய வேண்டும் என்ற இலக்கில் இந்த தேர்வு எழுதினேன். தேர்ச்சி பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது" என்றார்.
