தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வனக்கல்லுாரி மாணவர்கள் கடந்த 23 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம்

வனக்கல்லுாரி மாணவர்கள் கடந்த 23 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம்

வனக்கல்லுாரி மாணவர்கள் கடந்த 23 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம்


UPDATED : பிப் 22, 2015 12:00 AM

ADDED : பிப் 22, 2015 11:29 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 22, 2015 12:00 AM ADDED : பிப் 22, 2015 11:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் வனக்கல்லுாரி மாணவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 23 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதில், அரசு எவ்வித செவி சாய்க்காததால் கடந்த ஐந்து நாட்களாக தொடர் உண்ணாவிரதம் இருந்து வந்தனர். இச்சம்பவம் சட்டசபையிலும் எதிரொலித்தது. இந்நிலையில், வேளாண் பல்கலை., துணைவேந்தர் ராமசாமி நேற்று மாலை மேட்டுப்பாளையம் வனக் கல்லுாரிக்கு வந்தார். மாணவ, மாணவிகளிடம் தனித்தனியாக பேசினார். மாலை 6.00 மணிக்கு துவங்கிய பேச்சுவார்த்தை நள்ளிரவு 1.00 மணி வரை நீடித்தது.

இதில், இன்று ( 22ம் தேதி ) நடக்கும் வனவர் தேர்வை ரத்து செய்து மீண்டும் எங்களுக்கு வனவர் பணிக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றனர். ஆனால், இக்கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இருப்பினும், தங்களது தொடர் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்று, உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us