தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கிளை நுாலகத்தில் வீணாகும் பல லட்சம் மதிப்புள்ள புத்தகங்கள்

கிளை நுாலகத்தில் வீணாகும் பல லட்சம் மதிப்புள்ள புத்தகங்கள்

கிளை நுாலகத்தில் வீணாகும் பல லட்சம் மதிப்புள்ள புத்தகங்கள்


UPDATED : பிப் 22, 2015 12:00 AM

ADDED : பிப் 22, 2015 12:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 22, 2015 12:00 AM ADDED : பிப் 22, 2015 12:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

எழுமலை: மதுரை மாவட்டம் எழுமலை கிளை நுாலகத்தில் ரேக்குகள் இன்றி, பல லட்சம் மதிப்புள்ள புத்தகங்கள் வீணாகின்றன.

மாவட்ட நுாலக அலுவலர் கட்டுப்பாட்டில் இந்த கிளை நுாலகம் உள்ளது. 42,000 புத்தகங்கள் உள்ளன. 500 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். தினமும் நுாற்றுக்கணக்கான வாசகர்கள் வருகின்றனர். அரசு போட்டி தேர்வுகளுக்கு படிப்போரும் வருகின்றனர்.

அனைத்து வகை புத்தகங்கள் இருந்தும் அவற்றை அடுக்கி வைக்க ரேக்குகள் இல்லை. தரையில் புத்தகங்களை அடுக்கியுள்ளனர். ஆண்டுதோறும் 1200 புதிய புத்தகங்களை மாவட்ட நுாலகம் அனுப்புகிறது. போதிய இட வசதி இன்மையால் அவற்றையும் குவித்து வைத்துள்ளனர்.

கிளை நுாலகம் அருகிலுள்ள இடத்தில் கூடுதல் கட்டடம் கட்டி விரிவாக்கம் செய்ய வேண்டும். மேலும் தேவையான ரேக்குகளை வாங்கி புத்தகங்களை அடுக்கி வைத்தால் மட்டுமே அவை கரையானுக்கு இரையாவதை தடுக்க முடியும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us