தந்தை இறந்தாலும் மனம் தளராமல் தேர்வெழுதிய மாணவிக்கு பாராட்டு
தந்தை இறந்தாலும் மனம் தளராமல் தேர்வெழுதிய மாணவிக்கு பாராட்டு
UPDATED : பிப் 24, 2015 12:00 AM
ADDED : பிப் 24, 2015 10:44 AM
அ நிறம் | அளவு
மும்பை: வாஷிமில் உள்ள விவேகானந்தா ஜூனியர் கல்லூரி மாணவி உஜ்வாலா. நேற்று தனது 12-வது வகுப்பு தேர்வு எழுத தயாராகி கொண்டு இருந்தார்.
தேர்வு எழுத செல்லும் 1 மணி நேரத்திற்கு முன்பு அவரது தந்தை திடீர் மரணம் அடைந்தார். இதனால் துயரமுற்ற மாணவி, சோர்ந்து போய்விடாமல், மனதைரியத்துடன் தேர்வு மையத்துக்கு சென்று தேர்வு எழுதினார். துக்கத்தை ஓரம்கட்டி வைத்துவிட்டு தேர்வு எழுத சென்ற அந்த மாணவியை பாராட்டி, முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கடிதம் அனுப்பி உள்ளார்.
