தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தத்கல் திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு: ஹால்டிக்கெட் தயார்

தத்கல் திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு: ஹால்டிக்கெட் தயார்

தத்கல் திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு: ஹால்டிக்கெட் தயார்


UPDATED : பிப் 24, 2015 12:00 AM

ADDED : பிப் 24, 2015 12:29 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 24, 2015 12:00 AM ADDED : பிப் 24, 2015 12:29 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தத்கல் திட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், இன்றும், நாளையும் (பிப்ரவரி 24, 25), ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்த அறிவிப்பு

மார்ச் மாதம் நடக்கும் பிளஸ் 2 தேர்வு எழுத, தத்கல் திட்டத்தில் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், இன்று மற்றும் நாளை, www.tndge.in என்ற இணையதளத்தில், தங்கள் விண்ணப்ப எண், பிறந்த தேதியை பதிவு செய்து, ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கேட்டல், பேசுதல் திறன் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வு செய்ய வேண்டிய தேதிகள் பற்றிய விவரங்கள் குறித்து, தனித் தேர்வர்கள், ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டு உள்ள தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ளலாம்.

ஏற்கனவே உரிய நேரத்தில் பிளஸ் 2 தேர்வு எழுத, ஆன்லைனில் விண்ணப்பித்து, ஹால் டிக்கெட்டை இதுவரை பதிவிறக்கம் செய்யாத தனித் தேர்வர்களும், இணையதளத்தில் உடனடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us