சென்னை மாநகராட்சி பள்ளிகள் மூடப்படுவதாக கூறுவது தவறான தகவல்: அமைச்சர்
சென்னை மாநகராட்சி பள்ளிகள் மூடப்படுவதாக கூறுவது தவறான தகவல்: அமைச்சர்
UPDATED : பிப் 24, 2015 12:00 AM
ADDED : பிப் 24, 2015 12:34 PM
அ நிறம் | அளவு
சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகள் மூடப்படுவதாக கூறப்படுவது தவறான தகவல் என, உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.
சட்டசபையில் நடந்த விவாதம்
மார்க்.கம்யூ., - சவுந்தரராஜன்: அரசு ஆரம்பப் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள் மூடப்படுகின்றன; ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டாலும், காலியிடங்கள் உள்ளன.
அமைச்சர் வேலுமணி: சென்னை மாநகராட்சி பள்ளிகள் மூடப்படுவதாக செய்தி வந்துள்ளது; அது தவறான தகவல்; பள்ளிகளை மூடும் எண்ணமோ, அவற்றை தனியார் மயமாக்கும் எண்ணமோ, அரசுக்கு கிடையாது.
கடந்த ஆட்சியில் 54 பள்ளிகள் மூடப்பட்டன; ஆனால் இந்த ஆட்சியில் ஒரு பள்ளி கூட மூடப்படவில்லை.
