அனைத்து இன்ஜி. கல்லுாரிகளுக்கான யோகா போட்டிகளில் ஜே.ஜே., இன்ஜி. கல்லுாரி சாம்பியன்
அனைத்து இன்ஜி. கல்லுாரிகளுக்கான யோகா போட்டிகளில் ஜே.ஜே., இன்ஜி. கல்லுாரி சாம்பியன்
UPDATED : பிப் 25, 2015 12:00 AM
ADDED : பிப் 25, 2015 11:45 AM
கோவை: சென்னை அண்ணா பல்கலை அனைத்து இன்ஜி., கல்லுாரிகளுக்கான யோகா போட்டிகளில் மாணவர், மாணவியர் இரு பிரிவுகளிலும், திருச்சி ஜே.ஜே., இன்ஜி., கல்லுாரி அணியினர், சாம்பியன் பட்டம் வென்றனர்.
குனியமுத்துார் கிருஷ்ணா இன்ஜி., தொழில்நுட்ப கல்லுாரி சார்பில் அண்ணா பல்கலை மாநில அளவில், 20 மண்டல அனைத்து இன்ஜி.,கல்லுாரி மாணவ, மாணவியருக்கான யோகா போட்டி, கல்லுாரி வளாகத்தில் நடந்தது. 300 மாணவ, மாணவியர், வெவ்வேறு போட்டிகளில் பங்கேற்றனர்.
* மாணவர் பிரிவில்: திருச்சி ஜே.ஜே.,இன்ஜி., கல்லுாரி 2,179 புள்ளிகளுடன் முதலிடமும்; நாமக்கல் பாவை இன்ஜி.,கல்லுாரி 2,177 புள்ளிகளுடன் 2வது இடமும்; நாமக்கல் பாவை தொழில்நுட்ப கல்லுாரி 2,067 புள்ளிகளுடன் 3வது இடமும்; சென்னை சாஸ்தா இன்ஜி.,கல்லுாரி, 1,854 புள்ளிகளுடன் 4வது இடமும் பெற்றன.
* மாணவியர் பிரிவில்: திருச்சி ஜே.ஜே., இன்ஜி.,கல்லுாரி, 2,086 புள்ளிகளுடன் முதலிடமும்; நாமக்கல் பாவை இன்ஜி., கல்லுாரி, 1,990 புள்ளிகளுடன் 2வது இடமும்; சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லுாரி 1,849 புள்ளிகளுடன் 3வது இடமும்; கரூர் செட்டிநாடு இன்ஜி.,கல்லுாரி, 1,769 புள்ளிகளுடன் 4வது இடமும் பெற்றன. கோவை மண்டல விளையாட்டு மேலாளர் ராஜமகேந்திரன் பரிசளித்தார்.
