தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தனித்தேர்வர்கள், சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு

தனித்தேர்வர்கள், சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு

தனித்தேர்வர்கள், சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு


UPDATED : பிப் 25, 2015 12:00 AM

ADDED : பிப் 25, 2015 11:42 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 25, 2015 12:00 AM ADDED : பிப் 25, 2015 11:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வுக்கு, தேர்வுத்துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களுக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்கள், சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

முதன்மை கல்வி அதிகாரி ராமலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இன்று 25ம் தேதி, 26ம் தேதிகளில் தனித்தேர்வர்கள், சோலை நகர் சாலைத்தெருவில் உள்ள அரவிந்தர் ஆங்கில மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுத்துறை சேவை மையத்தில் நேரில் சென்று, ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தனியார் இன்டர்நெட் மையத்தின் மூலம் விண்ணப்பிக்க இயலாது.

செய்முறை பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டவர்கள் மட்டுமே கருத்தியல் தேர்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர். ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் அறிவியல் பாடத்திற்கான செய்முறைப் பயிற்சி வகுப்பிற்கு விண்ணப்பித்து, செய்முறை பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு, ஆனால், கருத்தியல் தேர்வுக்கு விண்ணப்பிக்காமல் விடுபட்டுள்ள தனித்தேர்வகள், தற்போது கருத்தியல் தேர்வுக்கு சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.

தனித் தேர்வர்கள், 125 ரூபாய் தேர்வு கட்டணமாக செலுத்த வேண்டும். இவற்றுடன் கூடுதலாக சிறப்பு அனுமதி கட்டணமாக 500 ரூபாய் மற்றும் ஆன்லைன் பதிவுக் கட்டணமாக 50 ரூபாய் உட்பட மொத்தம் 675 ரூபாயை, அரசு தேர்வுத்துறை சேவை மையத்தில் பணமாக மட்டுமே செலுத்த வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us