தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாநில வில்வித்தை போட்டியில் திருப்பூர் பள்ளி மாணவர்களுக்கு தங்கப்பதக்கம்

மாநில வில்வித்தை போட்டியில் திருப்பூர் பள்ளி மாணவர்களுக்கு தங்கப்பதக்கம்

மாநில வில்வித்தை போட்டியில் திருப்பூர் பள்ளி மாணவர்களுக்கு தங்கப்பதக்கம்


UPDATED : பிப் 25, 2015 12:00 AM

ADDED : பிப் 25, 2015 12:35 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 25, 2015 12:00 AM ADDED : பிப் 25, 2015 12:35 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: மாநில வில்வித்தை போட்டியில், திருப்பூரை சேர்ந்த பள்ளி மாணவர்கள் தங்கப்பதக்கம் பெற்றனர்.

மகரிஷி கோப்பைக்கான மாநில வில்வித்தை போட்டி, சென்னை சேப்பாக்கம் மகரிஷி வித்யாமந்திர் பள்ளியில், சமீபத்தில் நடைபெற்றது; பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில், திருப்பூர் மாவட்ட பள்ளி மாணவ, மாணவியர் பதக்கங்கள் பெற்றனர்.

10 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், ஏ.வி.பி., பள்ளி அபிஜித் ராஜா, "இந்தியன் பவ் சிங்கிள் ஸ்பாட்டில் தங்கப்பதக்கம், பைவ் ஸ்பாட்டில் வெண்கலம் வென்றார். 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், அகரம் பள்ளி மாணவன் மகேஷ்குமார், பேர் ரிக்கர்வ் பவ் சிங்கிள் ஸ்பாட்டில் தங்கப்பதக்கம் வென்றார். ஸ்பிரிங் மவுண்ட் பள்ளி மாணவன் ரித்திக் சமீர், காம்பவுண்ட் பவ் சிங்கிள் ஸ்பாட்டில் தங்கப்பதக்கம், பைவ் ஸ்பாட்டில் வெள்ளிப் பதக்கம் பெற்றார். எஸ்.பி.கே., பள்ளி மாணவி நித்யா சவுந்தர்யா, ரிக்கர்வ் பவ் பைவ் ஸ்பாட்டில் தங்கப்பதக்கம் வென்றார்.

17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், செஞ்சுரி பவுண்டேஷன் பள்ளி மாணவன் ரக்ஷன், ரிக்கர்வ் பவ் சிங்கிள் ஸ்பாட், பைவ் ஸ்பாட்டில் தலா 2 வெள்ளிப் பதக்கங்கள் வென்றார். மாணவன் ரித்திக் சமீர், சாம்பியன் ஆப் சாம்பியன் பட்டத்தில் 2ம் இடம் பிடித்தார். மாநில அளவிலான போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியரை, திருப்பூர் மாவட்ட வில்வித்தை கழக தலைவர் செல்வராஜ், செயலாளர் மற்றும் பயிற்சியாளர் தனசேகரன் உள்ளிட்டோர் வாழ்த்தினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us