தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/‘மாணவர் போலீஸ் கெடிட்’ திட்டம் மார்ச் 2ல் துவக்கம்

‘மாணவர் போலீஸ் கெடிட்’ திட்டம் மார்ச் 2ல் துவக்கம்

‘மாணவர் போலீஸ் கெடிட்’ திட்டம் மார்ச் 2ல் துவக்கம்


UPDATED : பிப் 26, 2015 12:00 AM

ADDED : பிப் 26, 2015 11:13 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 26, 2015 12:00 AM ADDED : பிப் 26, 2015 11:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: கர்நாடக காவல் துறை வடிவமைத்துள்ள, ’மாணவர் போலீஸ் கெடிட்’ (எஸ்.பி.சி.,) திட்டம், வரும் மார்ச் 2ம் தேதி, துவங்கப்பட உள்ளது.

போலீஸ் நடைமுறையை, மக்களுக்கு நண்பனாக செயல்படுத்தவும், பள்ளி மாணவ, மாணவியரின் பாதுகாப்பு நோக்கிலும், என்.சி.சி., போன்று, கர்நாடகாவில், ’எஸ்.பி.சி.,’ திட்டத்தை செயல்படுத்த, அரசு முன்வந்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும், மாணவ, மாணவியருக்கு, போலீஸ் பயிற்சி அளிக்கப்படும்; பின், அவர்கள் போலீசாருடன் இணைந்து, பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். இத்திட்டத்துக்கு முதற்கட்டமாக, உயர் பள்ளி அளவில், 1,500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

ஒவ்வொரு பள்ளியில் இருந்தும், இரு ஆசிரியர்கள், சமுதாய போலீஸ் அதிகாரி (சி.பி.ஓ.,) மற்றும் உதவி சமுதாய போலீஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். கண்டீரவா விளையாட்டு அரங்கில், மார்ச் 2ம் தேதி நடக்கும் நிகழ்ச்சியில், முதல்வர் சித்தராமையா, இந்த எஸ்.பி.சி., திட்டத்தை துவக்கி வைக்கிறார். இந்த திட்டத்துக்காக தயாரிக்கப்பட்ட பாட புத்தகத்தை, அமைச்சர் ஜார்ஜ் வெளியிடுகிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us