எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு மையங்களில் கேமரா பொருத்த ஆலோசனை
எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு மையங்களில் கேமரா பொருத்த ஆலோசனை
UPDATED : பிப் 26, 2015 12:00 AM
ADDED : பிப் 26, 2015 11:14 AM
பெங்களூரு: ”எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு மையங்களில், ’சிசிடிவி’ கேமரா பொருத்த ஆலோசிக்கப்படுகிறது,” என்று, துவக்க கல்வித் துறை அமைச்சர், கிம்மனே ரத்னாகர் தெரிவித்தார்.
நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு நடக்கும் மையங்களில், ’சிசிடிவி’ கேமரா பொருத்துவது உட்பட, கல்வித் துறையின் பல கோரிக்கைகளை, நாளை (இன்று) முதல்வர் தலைமையில் நடைபெறவுள்ள, பட்ஜெட் முன்னேற்பாடுகள் கூட்டத்தில் தெரிவிக்கப்படும்.
விதிமீறல்:
எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் நடக்கும் விதிமீறல்களை கட்டுப்படுத்த, பெரும்பாலான நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம். ‘சிசிடிவி’ பொருத்தினால், விதிமீறலுக்கு வாய்ப்பு இருக்காது என்ற நோக்கத்தில், ’சிசிடிவி’ பொருத்த ஆலோசிக்கிறோம். ஆசிரியர்கள், கிராமப்புற பள்ளிகளில், கட்டாயமாக பணியாற்றுவது தொடர்பான மசோதா, அடுத்த சட்டசபை கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
