தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/‘சீட்’ ஒதுக்க லஞ்சம் கேட்ட கல்வி அதிகாரி கைது

‘சீட்’ ஒதுக்க லஞ்சம் கேட்ட கல்வி அதிகாரி கைது

‘சீட்’ ஒதுக்க லஞ்சம் கேட்ட கல்வி அதிகாரி கைது


UPDATED : பிப் 26, 2015 12:00 AM

ADDED : பிப் 26, 2015 11:14 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 26, 2015 12:00 AM ADDED : பிப் 26, 2015 11:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: கல்வி உரிமை சட்டத்தின் கீழ், ’சீட்’ ஒதுக்க லஞ்சம் கேட்ட, பிளாக் கல்வி அதிகாரியை, லோக் ஆயுக்தா போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீசைத்தன்யா டெக்னோ பள்ளியில், ஜெயசீலா என்பவர் தன் மகளுக்கு, கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சீட் ஒதுக்குமாறு, கே.ஆர்.,புரம் பிளாக் கல்வி அதிகாரி, ஹேமந்த் பூஜாரியை அணுகினார். இதற்கு ஒப்புக் கொண்ட ஹேமந்த் பூஜாரி, ஜெயசீலாவின் ஜாதி சான்றிதழ் தருமாறும், சீட் ஒதுக்க 25 ஆயிரம் ரூபாய் தருமாறு கேட்டுள்ளார்.

இதில், முன்பணமாக, 4,000 ரூபாய் பெற்று கொண்ட ஹேமந்த், பாக்கி பணத்தை, 23ம் தேதி, பெலந்தூர் ரயில்வே ஸ்டேஷனில் வந்து கொடுக்குமாறு தெரிவித்தார். இதை தொடர்ந்து, ஜெயசீலா, லோக் ஆயுக்தா போலீசாரிடம் புகார் தெரிவித்தார். இதையடுத்து, போலீசாரின் யோசனைப்படி, ஹேமந்திடம், ஜெயசீலா பணம் கொடுத்தார். அப்போது, மறைந்திருந்த லோக் ஆயுக்தா போலீசார், ஹேமந்தை, கையும், களவுமாக பிடித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us