தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசு

அரசு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசு

அரசு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசு


UPDATED : பிப் 27, 2015 12:00 AM

ADDED : பிப் 27, 2015 10:59 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 27, 2015 12:00 AM ADDED : பிப் 27, 2015 10:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலூர்: கடலூர் மண்டல இந்தியன் வங்கி சார்பில் 2013-14ம் கல்வியாண்டில் அரசு பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் பிச்சையப்பன், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் இதர வகுப்பினர் பிரிவில் முதலிடம் பிடித்த 3 மாணவர் களுக்கும், இரண்டாமிடம் பிடித்த 5 மாணவர்களுக்கும், மூன்றாமிடம் பிடித்த 12 மாணவர்களுக்கும், எஸ்.சி.,- எஸ்.டி., பிரிவில் முதல் இரண்டு இடங்கள் பிடித்த மாணவர்கள் என, மொத்தம் 22 பேருக்கு தலா 5,000 ரூபாய் வீதம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாயை பரிசாக வழங்கி பேசினார்.

இதேப்போன்று, பிளஸ் 2 பொதுத் தேர்வில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவர்களுக்கும், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவர்கள் என, மொத்தம் 6 பேருக்கு தலா 7,500 ரூபாய் வீதம் 45 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us