விளையாட்டு ஆர்வத்தை ஏற்படுத்த கிராமக்குழு விளையாட்டு போட்டிகள்
விளையாட்டு ஆர்வத்தை ஏற்படுத்த கிராமக்குழு விளையாட்டு போட்டிகள்
UPDATED : பிப் 27, 2015 12:00 AM
ADDED : பிப் 27, 2015 12:11 PM
அ நிறம் | அளவு
ராமேஸ்வரம்: கிராமப்புற இளைஞர்களிடம் தனித்திறன், விளையாட்டு ஆர்வத்தை ஏற்படுத்த, அரசு உத்தரவுப்படி, கிராமக்குழு விளையாட்டு போட்டிகள் நேற்று, பாம்பன், தங்கச்சிமடம் ஊராட்சி சார்பில் நடத்தப்பட்டது.
அதில், இளைஞர்கள், பள்ளி மாணவர்களுக்கு ஓட்ட பந்தயம், கபடி, வாலிபால், குண்டு எறிதல், தட்டு எறிதல் ஆகிய போட்டி களை உடற்கல்வி ஆசிரியர்கள் முனியசாமி, செரோன் நடத்தினர். வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், பதக்கம், ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது.
ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள வரவணி ஊராட்சியில் கிராம விளையாட்டு போட்டிகள் சி.எஸ்.ஐ. தொடக்கப் பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் ஜோசப் தலைமையில் நடந்தது. போட்டிகளில் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
