மார்ச் 2ல் பெங்களூரு தமிழ் சங்கம் சார்பில் கர்நாடக தமிழாசிரியர்கள் கருத்தரங்கம்
மார்ச் 2ல் பெங்களூரு தமிழ் சங்கம் சார்பில் கர்நாடக தமிழாசிரியர்கள் கருத்தரங்கம்
UPDATED : பிப் 28, 2015 12:00 AM
ADDED : பிப் 28, 2015 11:17 AM
பெங்களூரு: வரும், மார்ச் 2ம் தேதி, பெங்களூரு தமிழ் சங்கம் சார்பில், கர்நாடகா தமிழாசிரியர்கள் கருத்தரங்கம் நடக்கிறது.
சிக்கல்
கர்நாடக மாநிலத்தில், தமிழை முதன் மொழியாக கற்பிக்கும் தமிழாசிரியர்களுக்கு, பல்வேறு சிக்கல்கள் உள்ளன. குறிப்பிட்ட காலத்தில், தமிழ் பாட நூல்கள் கிடைக்க செய்தல், மாணவ, மாணவியரிடையே தமிழ் ஆர்வத்தை ஏற்படுத்துதல், பள்ளிகளில் தமிழ் படிக்கும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கையை பெருக்குதல், போன்றவற்றை, இக்கருத்தரங்கு ஆராய்ந்து முடிவுகளை மேற்கொள்ளும்.
கர்நாடக மாநிலத்தில், முதன் முறையாக, இக்கருத்தரங்கை, பெங்களூரு தமிழ் சங்கம் நடத்துகிறது. பெங்களூரு, கோலார் தங்கவயல், சிக்கமகளூரு, பத்ராவதி, ஹிரியூர், ஷிவமொகா, துங்கபத்ரா உள்ளிட்ட, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், தமிழாசிரியர்கள் இக்கருத்தரங்கில் கலந்து கொள்கின்றனர். வரும் மார்ச் 2ம் தேதி, காலை, 10:00 மணியில்இருந்து, மாலை, 4:00 மணி வரை, காடுகொண்டனஹள்ளி பகுதியில் அமைந்துள்ள தமிழ் சங்க காமராஜர் பள்ளி அரங்கில், இக்கருத்தரங்கம் நடக்கிறது.
அழைப்பு
கருத்தரங்கை, கிரேட்டர் பெங்களூரு மாநகராட்சி கல்வி நிலைக்குழு தலைவர் தன்ராஜ் துவக்கி வைக்கிறார். இக்கருத்தரங்கில் கலந்து கொள்ள விரும்பும் ஆசிரியர்கள், மேலும் விவரங்களுக்கு, 93413 15907 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு, தமிழ் சங்க தலைவர் தாமோதரன் கேட்டுக் கொண்டுள்ளனர்.
