வருவாய் உதவியாளராக பதவி உயர்வு பெறுவதற்கான நிபந்தனை தளர்வு
வருவாய் உதவியாளராக பதவி உயர்வு பெறுவதற்கான நிபந்தனை தளர்வு
UPDATED : பிப் 28, 2015 12:00 AM
ADDED : பிப் 28, 2015 11:19 AM
சென்னை: கிராம நிர்வாக அலுவலர், வருவாய் உதவியாளராக பதவி உயர்வு பெற, 10 ஆண்டுகள் பணி புரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை, ஆறு ஆண்டுகளாக தளர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 12,614 வி.ஏ.ஓ., பணியிடங்கள் உள்ளன. இவர்களுக்கு, வருவாய் உதவியாளராக பதவி உயர்வு வழங்க, ஏற்கனவே 10 சதவீதம் ஒதுக்கீடு உண்டு. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி, சட்டசபையில், வருவாய் துறை அமைச்சர், புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அப்போது, வி.ஏ.ஓ., பதவி உயர்வு நிபந்தனையை தளர்த்தி, எட்டு ஆண்டு பணி முடித்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும். மேலும், தற்போதுள்ள பதவி உயர்வு 10 சதவீதத்தில் இருந்து, 30 சதவீதமாக உயர்த்தப்படும் என அறிவித்தார்.
இந்நிலையில், வருவாய் துறை கமிஷனர், பதவி உயர்வு நிபந்தனையை, ஆறு ஆண்டுகளாக குறைக்க, அரசுக்கு பரிந்துரை செய்தார். அதை அரசு ஏற்றுக் கொண்டது; அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை, வருவாய் துறை செயலர் வெங்கடேசன் பிறப்பித்துள்ளார்.
