தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கால்நடை மருத்துவக் கல்லூரியில் இலவச பயிற்சி

கால்நடை மருத்துவக் கல்லூரியில் இலவச பயிற்சி

கால்நடை மருத்துவக் கல்லூரியில் இலவச பயிற்சி


UPDATED : ஆக 20, 2015 12:00 AM

ADDED : ஆக 20, 2015 09:03 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 20, 2015 12:00 AM ADDED : ஆக 20, 2015 09:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்
: கால்நடைகளுக்கான அடர் தீவனம் தயாரித்தல், மதிப்புக்கூட்டிய பால் பொருட்கள் தயாரித்தல் குறித்த செயல்திறன் பயிற்சி, இம்மாதம் முதல், வரும், 2016, பிப்ரவரி வரை இலவசமாக வழங்கப்படும்என, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் குணசீலன் தெரிவித்துள்ளார்.

அவர், வெளியிட்ட அறிக்கை:

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், கால்நடைகளுக்கான அடர் தீவனம் தயாரித்தல், கால்நடைத் தீவன ஆலை இயக்கம் மற்றும் மேலாண், மதிப்புக் கூட்டிய பால் பொருட்கள் தயாரித்தல், பால் பதன நிலைய இயக்கம் மற்றும் மேலாண், கோழிக்குஞ்சு பொரித்தல் மேலாண், கோழிகளுக்கு தடுப்பூசி போடுதல் ஆகிய செயல் திறன் பயிற்சிகள், நடப்பு மாதம் முதல், 2016, பிப்ரவரி வரை, இலவசமாக நடத்தப்படுகிறது.

பயிற்சியில், வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள், உயர்க்கல்வி தொடர முடியாதவர்கள், கால்நடை மற்றும் கோழிவளர்ப்பில் அனுபவம் உள்ளவர்கள், சுயதொழில் முனைவோர் பங்குபெற்று பயன் பெறலாம். பயிற்சிகளில் பங்கு பெற விருப்பம் உள்ளவர்கள், எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். மேலும், 18 முதல், 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். பயிற்சி கட்டணம் எதுவும் இல்லாமல், இலவசமாக வழங்கப்படுகிறது.

பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு, உணவு மற்றும் தங்கும் வசதியை, தாங்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். ஒரு நபருக்கு உணவு மற்றும் போக்குவரத்துக்கான உதவித்தொகை, 2,250 ரூபாய் வழங்கப்படும். இதில், பங்குபெற விரும்புகிறவர்கள், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு, பயிற்சிக்கான விண்ணப்பப் படிவத்தை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us