UPDATED : ஆக 26, 2015 12:00 AM
ADDED : ஆக 26, 2015 11:20 AM
மதுரை
: மதுரை மாவட்ட பள்ளிகளில், வசதியின்றி கல்வியை தொடர இயலாத சிறுபான்மையின சிறந்த மாணவியர்,
மத்திய அரசின் மவுலானா ஆசாத் தேசிய கல்வி
உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
கலெக்டர்
சுப்பிரமணியன் கூறியுள்ளதாவது:
இஸ்லாமியர், சீக்கியர், கிறிஸ்தவர், புத்தமதம், பார்சிகள், ஜெயின் மதங்களை சேர்ந்த 11ம் வகுப்பு பயிலும் மாணவியருக்கு, மவுலானா ஆசாத் கல்வி அமைப்பு மூலம் தலா ரூ.6 ஆயிரம் வீதம் இரு தவணைகளாக ரூ.12 ஆயிரம் வழங்கப்படுகிறது. பத்தாம் வகுப்பில் 55 சதவீத மதிப்பெண்களுடன், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 11ம் வகுப்பு பயில வேண்டும்.
குடும்ப
ஆண்டு வருமானம் ரூ.ஒரு லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். இதற்கான
விண்ணப்பங்கள், உறுதி ஆவணங்களை www.//maef.nic.in
இணையதளத்தில் பதவி இறக்கம் செய்யலாம்.
பூர்த்தியான விண்ணப்பங்களை படிக்கும் கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.
தாளாளர், தலைமையாசிரியர் விண்ணப்பங்களை செயலாளர், மவுலானா ஆசாத் கல்வி பவுண்டேஷன், (மத்திய சிறுபான்மையினத்துறை), செல்ம்ஸ் போர்டு ரோடு, புதுடில்லி-110 055 என்ற முகவரிக்கு செப்., 30 மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
