UPDATED : ஆக 26, 2015 12:00 AM
ADDED : ஆக 26, 2015 11:22 AM
அ நிறம் | அளவு
சென்னை
: வி.ஏ.ஓ., பதவியில், 660 காலியிடங்களை நிரப்ப வரும், 2ம் தேதி
துவங்கும் கலந்தாய்வு, 11ம் தேதி வரை நடக்கும் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
இதுகுறித்த அறிவிப்பு: முதல் கட்ட கலந்தாய்வில் அறிவிக்கப்பட்ட, 2,342 காலிஇடங்களில், 1,682 இடங்கள் நிரப்பப்பட்டன. மீதமுள்ள, 660 இடங்களுக்கு, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, செப்., 2 முதல், 11ம் தேதி வரை நடக்கும். இதற்கான தேர்வர்களின் பட்டியலை, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பதாரர்களின் மதிப்பெண், தரவரிசை, இடஒதுக்கீடு போன்ற தகுதி அடிப்படையில், காலியிடங்களுக்கு ஏற்ப அனுமதிக்கப்படுவர்.
