தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முதலாமாண்டு வகுப்பு துவக்கம்; மருத்துவக் கல்லூரியில் பாதுகாப்பு தீவிரம்

முதலாமாண்டு வகுப்பு துவக்கம்; மருத்துவக் கல்லூரியில் பாதுகாப்பு தீவிரம்

முதலாமாண்டு வகுப்பு துவக்கம்; மருத்துவக் கல்லூரியில் பாதுகாப்பு தீவிரம்


UPDATED : செப் 01, 2015 12:00 AM

ADDED : செப் 01, 2015 11:35 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 01, 2015 12:00 AM ADDED : செப் 01, 2015 11:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை
: கோவை அரசு மருத்துவக் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில் முதலாமாண்டு மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று துவங்குகின்றன. கோவை அரசு மருத்துவக் கல்லுாரியில், 2015 - 16 கல்வியாண்டுக்கான, 150 மருத்துவ இடங்களும் நிரம்பின.

இதையடுத்து மாணவர்களுக்கு ஜீன்ஸ், டி-சர்ட், அணிய தடை விதித்து மருத்துவக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், முதலாமாண்டு மாணவர்கள், ராகிங் செய்யப்படுவது மற்றும் சீனியர் மாணவர்களின் பல்வேறு செயல்களிலிருந்து பாதுகாக்க, கல்லுாரி நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை டீன் எட்வின்ஜோ கூறியதாவது: 

முதலாமாண்டு மாணவர்களை ராகிங் செய்யக்கூடாது என, சீனியர் மாணவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ராகிங் செய்பவர்களை கண்காணிக்க சிறப்புக்குழுவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கல்லுாரி முழுவதும், 46 கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மாணவர்களின் விடுதிகளிலும், கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மாணவர்களின் வரவேற்பு நிகழ்ச்சிக்கு பின், பிரத்யேக கவுன்சிலிங் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்லுாரி குறித்தும், நடைமுறை, மாணவர்கள் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்தும் மாணவர்கள், பெற்றோருக்கு விளக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us