UPDATED : செப் 01, 2015 12:00 AM
ADDED : செப் 01, 2015 11:39 AM
உடுமலை
:
பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்கள்
தேர்வுகளை எளிமையாக எதிர்கொள்வதற்கு காலாண்டு தேர்வுகளையும், பொதுத்தேர்வு நடைமுறையில் நடத்த அரசு பள்ளி
தலைமையாசிரியர்கள் திட்டமிட்டுள்ளனர்.
உடுமலையில், 34 அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளியில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் நடப்பாண்டில் பொதுத்தேர்வு எழுத உள்ளனர். பொதுத்தேர்வில் அதிக சதவீத தேர்ச்சி என்ற இலக்கு தற்போது அரசு பள்ளிகளுக்கு கட்டாயமாக மாறியுள்ளது. இதனால், ஒவ்வொரு பள்ளிகளிலும், பல்வேறு புதிய யுக்திகளை பயன்படுத்தி மாணவர்களை தயார்ப்படுத்தி வருகின்றனர். கற்றல் திறன் குறைபாடுள்ள மாணவர்களை, தேர்ச்சி பெற வைப்பதற்கு சிறப்பு வகுப்புகள் நடத்தும் திட்டம் கொண்டு வரப்பட்டது.
இருப்பினும், அரசுப்பள்ளிகள் முன்னேறி, நுாறு சதவீத தேர்ச்சியோடு, மாணவர்களை அதிக மதிப்பெண் பெற செய்வதையும் இலக்காக நிர்ணயித்து தயாராகி வருகின்றன. இதற்கு எழுத்துப்பயிற்சியும் அவசியமாக உள்ளதென திட்டமிட்டு, காலாண்டு தேர்வு முதலே அதற்கான பணிகளை துவக்கியுள்ளனர்.
பள்ளி
தலைமையாசிரியர் ஒருவர் கூறியதாவது:
பொதுத்தேர்வு எழுதுகிறோம் என்ற எண்ணமே இல்லாத
அளவிற்கு, மாணவர்களுக்கு
முழுமையான எழுத்துப்பயிற்சி தேவையாக உள்ளது. பொதுத்தேர்வில் செய்ய வேண்டியவை,
செய்யக்கூடாத பிழைகளை அறிவுறுத்தி,
அவ்வாறு காலாண்டு தேர்வுகளுக்கும்
பின்பற்ற செய்ய வேண்டும்.
பொதுத் தேர்வு துவங்குவதற்கு ஓரிரு மாதங்கள் முன்னரே, மாணவர்களுக்கு இத்தகைய அறிவுரைகள் வழங்குகிறோம். இதனால், அந்த சமயத்தில் அதனை நினைவில் வைத்திருந்தாலும், தேர்வின் போது பதற்றத்தில் மறந்து விடுகின்றனர். காலாண்டு முதலே பொதுத் தேர்விற்கான பயிற்சியை துவக்கியுள்ளோம். தேர்வுத்தாள் திருத்துவதிலும், பொதுத்தேர்வு விடைக்குறிப்புகளின் படி திருத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
