அரசு பொறியியல் கல்லூரி தொழில் நுட்ப பல்கலை.,யாக அறிவிப்பு
அரசு பொறியியல் கல்லூரி தொழில் நுட்ப பல்கலை.,யாக அறிவிப்பு
UPDATED : செப் 03, 2015 12:00 AM
ADDED : செப் 03, 2015 11:34 AM
புதுச்சேரி அரசு பொறியியல் கல்லுாரியை, தொழில் நுட்ப பல்கலைக் கழகமாக பல்கலைக் கழக மானிய குழு அறிவித்துள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் முதலாவது அரசு பல்கலைக் கழகம் அமையும் திட்டம் நனவாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு ஓரிரு நாட்களில் முறைப்படி மாநில அரசுக்கு தெரிவிக்கப்பட உள்ளது.
புதுச்சேரி
அடுத்த பிள்ளைச்சாவடியில், 280 ஏக்கர் பரப்பளவில், புதுச்சேரி அரசு பொறியியல் கல்லுாரி, கடந்த 1985ல் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது,
எட்டு பி.டெக்., மற்றும் 11 எம்.டெக்., பாடப் பிரிவுகளுடன் இயங்கி வருகிறது. இக்கல்லுாரியில், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படித்து வருகின்றனர்.
இங்கு படிக்கும்
போதே, மாணவர்களுக்கு, கேம்பஸ் இண்டர்வியூ மூலம், வேலை
கிடைப்பதால், இக்கல்லுாரியில் சேர, ஆண்டு தோறும் கவுன்சிலிங்கில் கடும் போட்டி நிலவுகிறது. அண்மையில்,
தன்னாட்சி அந்தஸ்து பெற்ற இக்கல்லுாரியை,
அடுத்தகட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்லும்
வகையில், தொழில் நுட்ப பல்கலைக் கழகமாக மாற்ற
முழு வீச்சில் பணிகள் முடுக்கி விடப்பட்டன.
பரிந்துரை: கல்லுாரி
முதல்வர் கோவிந்தராஜலு தலைமையில் மூன்று பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது.
இக்குழுவினர் அனுப்பிய மனித வள மேம்பாட்டு பரிந்துரையை அமைச்சகம் ஏற்றுக் கொண்டது.
இதனையடுத்து, பல்கலைக் கழக மானிய குழுவிற்கு மூன்று
அறிக்கைகள் சமர்பிக்கப்பட்டன.
யு.ஜி.சி., ஓகே.,:இந்நிலையில், புதுச்சேரி அரசு பொறியியல் கல்லுாரிக்கு, தொழில் நுட்ப பல்கலைக் கழக அந்தஸ்து தருவது குறித்த ஆலோசனை கூட்டம் டில்லியில் உள்ள யு.ஜி.சி, அலுவலத்தில் நேற்று நடந்தது.
இதில் அரசு
பொறியியல் கல்லுாரியின் உட்கட்டமைப்பு, கல்லுாரியின் 25 ஆண்டு கால வளர்ச்சி பணிகள், மாணவர் களின்
வேலை வாய்ப்பு குறித்து நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது. இறுதியில் புதுச்சேரி அரசு
பொறியியல் கல்லுாரி, தொழில் நுட்ப பல்கலைக் கழகமாக
மாற்றப்படுவதாக ஒருமனதாக கைதட்டல்களுடன் அறிவித்தனர். ஒரிரு நாட்களில் முறைப்படி
மாநில அரசுக்கு தெரிவிக்கப்பட உள்ளது.
நன்மைகள்
ஏராளம்:அரசு பொறியியல் கல்லுாரி, தொழில் நுட்ப பல்கலைக் கழகமாக
மாற்றுவதால் அரசுக்கு எந்த நிதி பிரச்னையும் இல்லை. பேராசிரியர், ஊழியர்களுக்கும் பாதிப்பில்லை. மாத சம்பளத்தை இழுத்தடித்து தர
வேண்டிய நிலைமையும் அரசுக்கு ஏற்படாது. கல்லுாரிக்கு தேவையான புதிய கட்டடங்கள்,
லேப் வசதிகளை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.
காலத்திற்கேற்ப புதிய பாடப் பிரிவுகளை துவக்க முடியும்.
அரசு பொறியியல்
கல்லுாரி, தொழில்நுட்ப பல்கலைக் கழகமாக
மாற்றியதன் மூலம் இனி, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 17 தனியார் பொறியியல் கல்லுாரிகளும், புதுச்சேரி தொழில் நுட்ப பல்கலைக் கழகத்தின் கீழ் அடுத்தாண்டு கொண்டு
வரப்பட உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளது.
அரசு பொறியியல்
கல்லுாரி தற்போது நிதி நெருக்கடியில் தள்ளாடுகிறது. தொழில் நுட்ப பல்கலைக் கழகமாக
மாற்றியதால் இனி நிதிநெருக்கடியில் இருந்து மீளும்.தனியார் கல்லுாரிகள் இணைப்பு
அங்கீகாரம் பெறுவதற்காக ஆண்டு தோறும் புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கு 6 லட்சம்
ரூபாய் செலுத்துகின்றன. இந்த இணைப்பு தொகை இனி அரசு பொறியியல் கல்லுாரிக்கு
கிடைக்கும். தேர்வு நடத்த இணைப்பு கல்லுாரி தரும் நிதியிலிருந்து, அரசை எதிர்பார்க் காமல் சொந்த காலில் பல்கலைக் கழகத்தை நிர்வகிக்க
முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டசபையில் தீர்மானம் எப்போது?:தொழில்நுட்ப பல்கலைக் கழகமாக மாற்றப்பட்டாலும் அரசு பொறியியல் கல்லுாரி பல நிலைகளை கடக்க வேண்டியது உள்ளது.முதலில் புதுச்சேரி பல்கலைக் கழகத்தின் அங்கீகாரத்திலிருந்து விலகுவதாக கடிதம் தர வேண்டும். பின், தொழில்நுட்ப பல்கலைக் கழகம் மாறுவது தொடர்பாக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
