UPDATED : செப் 03, 2015 12:00 AM
ADDED : செப் 03, 2015 11:31 AM
அ நிறம் | அளவு
சென்னை
: இன்ஜி.,
முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்பில்
சேர்வதற்கான, கேட் பொது நுழைவுத்தேர்வுக்கு, அக்., 1ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
இன்ஜி., பட்டதாரிகளுக்கான திறனறி, ஆன்-லைன் தேர்வான, கேட் தேர்வு, ஜன., 30ல் துவங்கி, பிப்., 7ம் தேதி முடிகிறது; இதற்கான, ஆன் - லைன் பதிவு, கடந்த 1ம் தேதி துவங்கியது; அக்., 1ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விவரங்களை, http://www.gate.iisc.ernet.in/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
