UPDATED : செப் 05, 2015 12:00 AM
ADDED : செப் 05, 2015 11:36 AM
சென்னை
: ஓமந்துாரார் அரசு மருத்துவக்
கல்லுாரிக்காக, 200 கோடி ரூபாயில் கட்டியுள்ள பிரம்மாண்ட
கட்டடங்களை, முதல்வர் ஜெயலலிதா, வரும் 7ம் தேதி திறந்து வைக்கிறார்.
சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில், அரசு மருத்துவக் கல்லுாரி, 200 கோடி ரூபாய் செலவில், ஒன்றுடன் ஒன்றுக்கு இணைப்புடன் கூடிய, ஏழு பிரம்மாண்ட கட்டடங்கள் கட்டப்பட்டு உள்ளன. மேலும், 15 கோடி ரூபாயில், மருத்துவக் கருவிகளும் வாங்கப்பட்டு உள்ளன. இரு கட்டடங்களில் கல்லுாரியும், மூன்று கட்டடங்களில் மருத்துவமனையும், இரு கட்டடங்களில் விடுதிகளும் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த கட்டடங்களை, முதல்வர் ஜெயலலிதா, வரும் 7ம் தேதி திறந்து வைக்கிறார்.
இந்த கல்லுாரி, 20வது அரசு மருத்துவக் கல்லுாரியாக செயல்படும். எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு, 100 மாணவர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்த மாத இறுதியில், வகுப்புகள் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
