டிசம்பர் தேர்வுக்கு கடைசி தேதி; சென்னை பல்கலை அறிவிப்பு
டிசம்பர் தேர்வுக்கு கடைசி தேதி; சென்னை பல்கலை அறிவிப்பு
UPDATED : அக் 01, 2015 12:00 AM
ADDED : அக் 01, 2015 10:18 AM
அ நிறம் | அளவு
சென்னை
:
சென்னைப் பல்கலை தொலைநிலைக் கல்வியில், இளங்கலை மற்றும்
முதுகலை படிப்புக்கு, டிசம்பர் மாதம் நடக்கும் தேர்வுக்கு
விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, சென்னை பல்கலை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தொலை நிலைக் கல்வியில், டிசம்பரில் தேர்வு எழுத விரும்புவோர், கண்டிப்பாக, ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதோருக்கு தேர்வு எழுத அனுமதி இல்லை. வரும், 7ம் தேதி வரை அபராதம் இல்லாமல் விண்ணப்பிக்கலாம்; அக்., 14ம் தேதி வரை அபராதத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.
வங்கியில், தேர்வுக் கட்டணம் செலுத்திய பிறகு, விண்ணப்ப நகலை கண்டிப்பாக பல்கலையில் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
