தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவக் கல்லூரி சீட் வீண்! சென்டாக் அதிகாரிகள் குளறுபடி

மருத்துவக் கல்லூரி சீட் வீண்! சென்டாக் அதிகாரிகள் குளறுபடி

மருத்துவக் கல்லூரி சீட் வீண்! சென்டாக் அதிகாரிகள் குளறுபடி


UPDATED : அக் 01, 2015 12:00 AM

ADDED : அக் 01, 2015 11:16 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 01, 2015 12:00 AM ADDED : அக் 01, 2015 11:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி
: அதிகாரிகள் குளறுபடியால்
, சென்டாக் மூலம் இந்திரா அரசு மருத்துவக் கல்லுாரியில் ஏழை மாணவருக்கு கிடைக்க வேண்டிய ஒரு சீட் வீணானது.

சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல்படி, அகில இந்திய மருத்துவ கவுன்சில் நெறிமுறைகள்படி, அனைத்து மருத்துவ மற்றும் பல் மருத்துவ கல்லுாரிகளில் இடங்கள் செப்.30ம் தேதிக்குள் நிரப்ப வேண்டும். புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லுாரியில், அகில இந்திய ஒதுக்கீட்டிற்காக அளித்த 22 இடங்களில், நிரப்பாமல் இருந்த 7 இடங்கள், கடந்த 28ம் தேதியன்று நடந்த சென்டாக் கவுன்சிலிங்கில் நிரப்பப்பட்டது. அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டின் விதிமுறைப்படி, கடந்த 15ம் தேதி, மாலை 5:00மணிக்குள் சேராத மருத்துவ இடங்களை காலியாக அறிவித்து, புதுச்சேரி அரசு ஒதுக்கீடாக கணக்கிட்டு சென்டாக் மூலம் நிரப்ப வேண்டும்.

அந்த வகையில், கடந்த 29ம் தேதி மதிய நிலவரப்படி இந்திரா காந்தி அரசு மருத்து கல்லுாரியில் 150 இடங்களில், சென்டாக் மூலம் 135 இடங்களும், அகில இந்திய ஒதுக்கீட்டின் மூலம் 14இடங்கள் உட்பட 149 இடங்கள் நிரப்பப்பட்டன. இக்கல்லுாரியில் காலியாக உள்ள ஒரு இடத்தை, நேற்று 30ம் தேதிக்குள் சென்டாக் கலந்தாய்வின் மூலம் நிரப்பி இருக்க வேண்டும். ஆனால், 28ம் தேதி மாலை 3:00 மணியளவில் ஒரு இடம் காலியாக இருப்பதாக சென்டாக் நிர்வாகத்திற்கு, இந்திரா காந்தி அரசு கல்லுாரி நிர்வாகம் தெரிவித்தது. ஆனால், சென்டாக் நிர்வாகம், அந்த இடத்தை நிரப்ப ஆர்வம் காட்டாததால் சீட் வீணாகியது. ஒரு இடம் காலியாக இருப்பதை, சென்டாக் நிர்வாகத்திற்கு கால தாமதமாக, இந்திரா காந்தி அரசு கல்லுாரி நிர்வாகம் தெரிவித்தது.

இரு நாட்கள் அவகாசம் இருந்தும், அந்த இடத்தை நிரப்ப சென்டாக் நிர்வாகம் ஆர்வம் காட்டாமல் அலட்சியமாக இருந்ததால், ஏழை மாணவர் ஒருவரின் மருத்துவ படிப்பு, கனவாய் போனது. சென்டாக் கன்வீனர் கோவிந்தராஜலு கூறுகையில், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லுாரியில் ஏற்கனவே சீட் கிடைத்த ஒரு மாணவர் வெளியில் சென்றதால், இடம் காலியானது. கோர்ட் உத்தரவுபடி, 30ம் தேதிக்குள் அனைத்து இடங்களை யும் நிரப்ப வேண்டும். இறுதி நேரத்தில் தான், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லுாரியில் ஒரு இடம் காலியாக இருக்கும் விபரம் தெரிந்தது.

அந்த இடத்தை, காரைக்கால், ஏனாம், மாகி பிராந்திய மாணவர்களுக்கு முறையாக அறிவித்து, நிரப்ப வேண்டும். அதற்கு கால அவகாசம் இல்லை. அப்படியே நிரப்பினாலும், தனியார் மருத்துவக் கல்லுாரியை சேர்ந்த மாணவர் அந்த இடத்தை பிடித்தால், காலியாகும் இடத்தை வேறு மாணவரை கொண்டு நிரப்ப வேண்டும். இப்படி பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன. எனவே,இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லுாரியில் காலியான இடத்தை நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டது என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us