UPDATED : அக் 13, 2015 12:00 AM
ADDED : அக் 13, 2015 11:03 AM
மதுரை
: இந்த ஆண்டு நவம்பர், டிசம்பரில்
நடைபெறவுள்ள அரசு தொழில்நுட்ப தேர்விற்கு தகுதியுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்துடன் குறைந்தபட்ச கல்வித் தகுதிக்கான சான்றிதழின் நகல் மற்றும் பள்ளி மாற்றுச் சான்றிதழின் நகலினை ஒருங்கிணைப்பு மையங்களில் சமர்ப்பிக்கலாம். அங்கு போட்டோவுடன் கூடிய விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து கொள்ளவும், தேர்வுக் கட்டணம் செலுத்தவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை அக்.,14 (நாளை) முதல் அக்,., 20 வரை www.tndge.in என்ற இணையதளத்தில் அல்லது அரசு தேர்வு சேவை மையங்களில் பதிவிறக்கம் செய்யலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். தபால் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
விண்ணப்பங்களை அக்.,20, மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, அரசுத் தேர்வு மண்டலத் துணை இயக்குனர் லட்சுமி தெரிவித்துள்ளார்.
