தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நர்ஸிங் பயிற்சி பள்ளி தேர்வு முடிவு

நர்ஸிங் பயிற்சி பள்ளி தேர்வு முடிவு

நர்ஸிங் பயிற்சி பள்ளி தேர்வு முடிவு


UPDATED : அக் 13, 2015 12:00 AM

ADDED : அக் 13, 2015 11:06 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2015 12:00 AM ADDED : அக் 13, 2015 11:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்
: நர்ஸிங் பயிற்சி பள்ளி இரண்டாம் ஆண்டு தேர்வில் ராமநாதபுரம் மாணவி மாநிலத்தில் முதலிடம் பிடித்தார்.

தமிழகத்தில் 23 அரசு, 200க்கும் மேற்பட்ட தனியார் நர்ஸிங் பயிற்சி பள்ளிகள் உள்ளன. இவற்றில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த ஜூனில் இரண்டாம் ஆண்டு தேர்வு நடந்தது. சில நாட்களுக்கு முன் வெளியான தேர்வு முடிவில் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை நர்ஸிங் பள்ளி மாணவி முனீஸ்வரி என்ற கல்பனா 500க்கு 428 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்தார்.

பாடவாரியாக அவர் எடுத்த மதிப்பெண் மருத்துவ அறுவை சிகிச்சை முதல் தாள் -78, இரண்டாம் தாள் - 85, மனநல சிகிச்சை- 85, மருத்துவ அறுவை சிகிச்சை செய்முறை - 90, மனநல சிகிச்சை செய்முறை- 90. மாணவியை முதல்வர் எட்வின் நிர்மலா, துணை முதல்வர் பார்த்தீபன், ஒருங்கிணைப்பாளர்கள் நாகேந்திரன், ஷீலா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். 

துணை முதல்வர் பார்த்தீபன் கூறியதாவது: 

இப்பள்ளியில் இருந்து ஆண்டுக்கு 50 மாணவிகள் பயிற்சி முடித்து வெளியேறுகின்றனர். இவர்களில் பலர் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுகின்றனர். மாவட்ட தலைநகரில் இயங்கும் அரசு மருத்துவமனை நர்ஸிங் பள்ளி மாணவி மாநிலத்தில் முதலிடம் பிடிப்பது இதுவே முதல் முறை. தனியார் பள்ளிகள் மட்டுமின்றி அரசு பள்ளிகளில் படித்தாலும் சாதிக்க முடியும் என்பதை மாணவி கல்பனா நிரூபித்துகாட்டி உள்ளார் என்றார்.

கல்பனா கூறுகையில், மதுரை ஆலங்குளத்தைச் சேர்ந்த நான் ராமநாதபுரம் அரசு நர்ஸிங் பயிற்சி பள்ளியில் படித்து வருகிறேன். முதலாமாண்டு தேர்வில் 500க்கு 403 மதிப்பெண்களுடன் மாநிலத்தில் 4ம் இடம் பிடித்தேன். ஆசிரியர்களின் ஊக்கத்தால் இரண்டாம் ஆண்டு தேர்வில் முதலிடம் பிடிக்க முடிந்தது என்றார்.

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us